
அதகள ஆட்டம்
இப்போட்டியில், இந்திய அணியின் லோ ஆர்டரில் மிகப்பெரிய பங்கு வகிக்கப் போவது ரிஷப் பண்ட் தான் என்றால் அது மிகையாகாது. ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய அணியை கலங்க வைத்தது, இந்திய மண்ணில் இங்கிலாந்தை பீதியடைய வைத்தது என்று ரிஷப்பின் அதகள ஆட்டம், இன்னும் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளது.

அவர் எனக்கு கடவுள்
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணா, ரிஷப் பண்ட் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் தோனியோடு தன்னை கம்பேர் செய்வதை, ரிஷப் எந்தளவுக்கு வெறுக்கிறார் என்பது குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து ராணா இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில், "ரிஷப், தோனியை எப்போது ஆராதிக்கிறார். 'நான் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் நான் பார்க்க விரும்பும் ஒரே நபர் தோனி தான்' என்று ரிஷப் பலமுறை கூறியுள்ளார். 'மக்கள் என்னை ஏன் தோனியுடன் ஒப்பிடுகிறார்கள்? நான் ஒப்பிட்டுப் பார்க்கத் தகுதியற்றவன்' என்று என்னிடம் சொன்னார், மேலும் கைகளை மடித்துக் கொண்டு, 'என்னை தோனியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், என் பேட்டையும் மற்ற எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் விளையாட விரும்பவில்லை, ஆனால் என்னை தோனியுடன் ஒப்பிட வேண்டாம். அவர் எனக்கு ஒரு கடவுள் போன்றவர்" என்று ரிஷப் குறித்து ராணா பேசியுள்ளார்.

மிரட்டல் இன்னிங்ஸ் ஆடுவேன்
தொடர்ந்து பேசிய ராணா, "ரிஷப்பின் பலம் அவரது தன்னம்பிக்கை. அவர் எங்கு சென்றாலும் அவர் எந்த வடிவத்தில் விளையாடுகிறாரோ அந்த தன்னம்பிக்கையை அவர் ஒருபோதும் விட்டுவிடுவதில்லை. மக்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கிய ஒரு காலம் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் அவர் என்னிடம், 'நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடுவேன். அது வெகு தொலைவில் இல்லை. அந்த ஆட்டத்தை விளையாடிய பிறகு, எல்லோரும் அமைதியாக இருப்பார்கள், நான் விரைவில் அந்த இன்னிங்ஸை விளையாடுவேன் என்று நம்புகிறேன்' என்றார். அவர் அப்படிச் சொல்லிய அடுத்த போட்டியில், சதம் அடித்தார். கடந்த 2018-19ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்' என்று ராணா கூறியுள்ளார்.

துடைத்தெறிந்த ரிஷப்
உண்மை தான். ராணா கூறிய அத்தனை வார்த்தைகளும் உண்மை. சில வருடங்களுக்கு முன்பு வரை ரிஷப் இந்திய அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் தேர்வு அல்ல. அவரது உடல் வாகு, வெயிட், இன்கன்சிஸ்டன்சி போன்றவற்றால், அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு ஒர்த் இல்லை என்று விமர்சிக்கப்பட்டவர். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் ஆடிய விதம் இன்று அவருக்கான இடத்தை அணியில் சீல் செய்திருக்கிறது. கலக்குங்க பண்ட்!.


Click it and Unblock the Notifications