விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
ராஞ்சி: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்காக அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய வகையில் பிட்ச் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. வழக்கம் போல இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் படை மீண்டும் ஒரு முறை சாதிக்கவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகின்றன.

பிட்ச் ரிப்போர்ட்
இரு அணிகளின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. ராஞ்சி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு பெரியளவில் உதவக்கூடிய ஒன்றாகும். மைதானம் ஓரளவிற்கு பெரிதாக இருந்தாலும் பிட்ச் சற்று வறண்டு இருப்பதால் ஷாட்களை கவனித்து விளையாட முடியும். சராசரியாக இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 160 ரன்கள் வரை அடிக்கலாம் எனத்தெரிகிறது. 2வது இன்னிங்ஸில் இது 130 ஆக குறைகிறது.

ரெக்கார்ட்கள்
இந்த மைதானத்தில் இதுவரை 28 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும்பாலும் முதலில் பவுலிங் செய்யும் அணி வெற்றி பெற்றுள்ளது. ஏனென்றால் 2வது இன்னிங்ஸின் போது பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிப்பது கடினமாகிவிடுகிறது. இந்தியா இதுவரை 3 சர்வதேச போட்டிகளில் இங்கு விளையாடியுள்ளது. 3 முறையுமே வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பவுலிங் நிலைமை
பந்துவீச்சை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை செய்ய முடியாது. எனினும் சுழற்பந்துவீச்சாளர்கள் கலக்கலாம். பிட்ச் வறண்டு இருப்பதால் ஸ்லோயர் பந்து வீசுபவர்களுக்கு நல்ல டேர்ன்கள் கிடைக்கும். நியூசிலாந்திடம் சாண்ட்னர், இஷ் சௌதி போன்றோர் இருப்பதால் இந்திய வீரர்கள் கவனத்துடன் ஆட வேண்டும். 2வது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவும் இருக்கும் என்பதால் அதற்கேற்றார் போல முன்கூட்டியே ஸ்பின்னர்களை கொண்டு வர வேண்டும்.

பாண்ட்யாவின் திட்டம்
இந்திய ப்ளேயிங் 11-ல் 3 ஸ்பின்னர்களுடன் பாண்ட்யா களமிறங்குவார் எனத்தெரிகிறது. பேட்டிங்கில் ஆழமும் வேண்டும் என நினைத்தால் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோர் கொண்டு வரப்படலாம். ஒருவேளை முழு நேர ஸ்பின்னரான குல்தீப் யாதவையும் கொண்டு வந்தால் சற்று பேட்டிங்கில் அடிவாங்கும்.


Click it and Unblock the Notifications