Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டான் பிராட்மேனுக்கு பந்து வீசிய ஒரே தமிழக பவுலர் இவர்தான்.. 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பந்து வீசிய ஒரே ஒரு தமிழக பந்துவீச்சாளர் யார் என்பது பற்றியும், டான் பிராட்மேன் கேப்டன்சியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் டாட்டு பாட்கர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்த இரண்டு தகவல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

1947 - 48 இல் இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கு பெற பறந்து சென்றது, அதிக அனுபவம் இல்லாத இந்திய அணி வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிட்டியது. 5 டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடரில் எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலிய அணி 4 - 0 என்ற வித்தியாசத்தில் மகத்தான வெற்றி அடைந்தது.

australia don bradman tamilnadu

ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் டான் பிராட்மேன் அதிக ரன்கள் குவித்தார். அந்த ஒரே தொடரில் 715 ரன்கள் எடுத்தார். 178.75 என்ற பேட்டிங் சராசரி பெற்று தனி முத்திரை பதித்தார். ஒரு இரட்டை சதம் (201 ரன்கள்) உட்பட 4 சதங்கள் அடித்தார்.

டான் பிராட்மேன் அடித்த பவுண்டரிகள் எண்ணிக்கை மட்டும் 67 ஆகும். ஆனால், இந்த தொடரின் மொத்த டெஸ்ட்களில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் அடிக்கப் படும் பந்துகள் பெரும்பாலும் தரையோடு சென்று ரன்கள் குவிக்க உதவிகரமாக இருந்தன.

இந்திய அணி வீரர்களில் சில வீரர்கள் தங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தினர், இந்த சுற்றுப் பயணத்தில் இந்திய ஆல் ரவுண்டர் டாட்டு பாட்கர் 4 டெஸ்ட்களில் பங்கு பெற்று எட்டு இன்னிங்ஸில் பேட்டிங் ஆடினார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 51 ரன்கள் அடித்தார். பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் குவித்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். நான்காவது டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் குவித்தார். 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட்டில் டான் பிராட்மேனின் இரட்டை சதம் (201) உட்பட 6 சதங்கள் அடிக்கப்பட்டன.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லிண்ட்சே ஹாசெட் 2 ரன்களில் அவரது இரட்டை சதத்தை தவற விட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 198 ரன்கள் எடுத்து இருந்தார். துவக்க வீரர் சிட் பர்ன்ஸ் 112 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் டாட்டு பாட்கர் சதம் 123 ரன்கள் குவித்தார். விஜய் ஹாசரே இந்த டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சதங்கள் எடுத்து அசத்தினார். 116 மற்றும் 145 ரன்கள் குவித்தார்.

அன்றைய மெட்ராஸ் அணி வீரர் ரங்காச்சாரி இந்திய அணியில் இடம் பெற்று இந்தப் போட்டியில் பவுலிங்கில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். புகழ் பெற்ற பேட்ஸ்மேனாக திகழ்ந்த டான் பிராடமேனுக்கு டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய ஒரே ஒரு தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றவரானார் ரங்கச்சாரி.

இந்த தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாட்டு பாட்கர் 56 ரன்கள் குவித்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த தொடர் தான் கேப்டனாக டான் பிராட்மேன் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய கடைசி டெஸ்ட் தொடர் ஆகும்.

- வாசுதேவன், பெங்களூரு.

Story first published: Monday, November 25, 2024, 13:13 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+