Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா அது? 67 விக்கெட்.. மிரட்டல் சாதனை.. 10 வருடம் கழித்து டீமில் இடம் கேட்கும் வீரர்!

மும்பை : சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆன வீரர் அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? என ஆவலுடன் காத்திருக்கிறார்.

சமீபத்தில் அவர் ரஞ்சி ட்ராபி தொடரில் ஒரே சீசனில் 67 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் ஜெயதேவ் உனட்கட்.

எந்த வேகப் பந்துவீச்சாளரும் ஒரே சீசனில் 67 விக்கெட்கள் வீழ்த்தியதில்லை. அந்த சாதனையை செய்த அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கக் காத்திருக்கிறார்.

சௌராஷ்டிரா வீரர் உனட்கட்

சௌராஷ்டிரா வீரர் உனட்கட்

சௌராஷ்டிரா அணியை சேர்ந்த வீரர் தான் ஜெயதேவ் உனட்கட். வேகபந்து வீச்சாளர் ஆன அவர் கடந்த காலங்களில் ரஞ்சி தொடரில் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். அதனால், இந்திய அணியில் சில வாய்ப்புகளையும் அவர் பெற்றார்.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

2020 ரஞ்சி ட்ராபி தொடரில் கேப்டனாக செயல்பட்ட அவர், சௌராஷ்டிரா அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்து, இறுதிப் போட்டியில் வெற்றியும் பெற முக்கிய காரணமாக விளங்கினார். இறுதிப் போட்டியில் கடினமான ஆடுகளத்திலும் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

விக்கெட் சாதனை

விக்கெட் சாதனை

இந்த ரஞ்சி ட்ராபி சீசனில் மட்டும் அவர் 67 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 13.23 மட்டுமே. ரஞ்சி ட்ராபியில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியதில் இரண்டு சாதனைகளை செய்துள்ளார் ஜெயதேவ் உனட்கட்.

இரண்டு சாதனைகள்

இரண்டு சாதனைகள்

ரஞ்சி ட்ராபி வரலாற்றில் எந்த வேகப் பந்துவீச்சாளரும் ஒரே சீசனில் 67 விக்கெட்டை வீழ்த்தியதில்லை. உனட்கட் அந்த சாதனையை செய்துள்ளார். மேலும், இது ஒட்டுமொத்த ரஞ்சி ட்ராபி வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட் சாதனை ஆகும்.

அணியில் இடம் கிடைக்குமா?

அணியில் இடம் கிடைக்குமா?

இந்த நிலையில், உச்சகட்ட பார்மில் இருக்கும் ஜெயதேவ் உனட்கட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருக்கு அணியில் இடம் அளிப்பதில் ஒரு வேடிக்கையான விஷயமும் உள்ளது.

10 வருடத்திற்கு முன் அறிமுகம்

10 வருடத்திற்கு முன் அறிமுகம்

ஜெயதேவ் உனட்கட் 2010ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று, ஒரே ஒரு போட்டியில் ஆடி உள்ளார். அந்தப் போட்டியில் மொத்தமாக 26 ஓவர்கள் வீசி, ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அத்துடன் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒருநாள், டி20 போட்டி

ஒருநாள், டி20 போட்டி

அடுத்து 2013ஆம் ஆண்டில் 7 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். அதில் எட்டு விக்கெட்களும் வீழ்த்தினார். பின் ஒருநாள் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் 2016இல் டி20யில் அறிமுகம் ஆகி மார்ச் 2018 வரை 10 போட்டிகளில் ஆடினார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

பின்னர், டி20 அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், அவருக்கு ஐபிஎல் தொடரில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சராசரிக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான் அவர் ரஞ்சி ட்ராபியில் சாதனை செய்துள்ளார்.

மீண்டும் இடம்

மீண்டும் இடம்

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் ஜெயதேவ் உனட்கட் டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டி காத்திருப்பது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. அவரை டி20 வீரர் என்றே முத்திரை குத்தி இருந்த நிலையில் அவர் முதல் தர போட்டிகளில் கலக்கி இருக்கிறார்.

புஜாரா ஆதரவு

புஜாரா ஆதரவு

இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா, சௌராஷ்டிரா அணியை சேர்ந்தவர். அவர் ஜெயதேவ் உனட்கட்டுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தான் வியப்படைவேன் என கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, March 15, 2020, 17:13 [IST]
Other articles published on Mar 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+