Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

88 ஆண்டு வரலாற்றில் முதல் முறை..!! சச்சின் கூட செய்தது இல்லை..!! ரஞ்சி கோப்பையில் இளம் வீரர் சாதனை

கொல்கத்தா: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பீஹார் அணியும், மிசோரம் அணியும் மோதின.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பீஹார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய பீஹார் அணியின் யஷாஸ்வி 38 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் மங்கல் டக் அவுட்டானார்.

அறிமுக போட்டி

அறிமுக போட்டி

ஒரு கட்டத்தில் பீஹார் அணி 71 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. இதனையடுத்து தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய 22 வயதான ஷகிபுல், அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். பந்தை எப்படி வீசினாலும், பந்தை பவுண்டரிகளுக்கு விளாசினார்.

முச்சதம்

முச்சதம்

இதே போன்று மறுமுணையில் பாபுல் குமார், அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மிசோரம் வீரர்கள் திணறினர்.சிறப்பாக விளையாடிய ஷகிபுல், 405 பந்துகளை எதிர்கொண்டு 341 ரன்கள் விளாசினார். இதில் 56 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் அறிமுக போட்டியில் முச்சதம் விளாசியவர், இளம் வயதில் முச்சதம் விளாசியவர் என்ற பெருமையை ஷகிபுல் பெற்றார்.

ரஹானே சதம்

ரஹானே சதம்

மறுமுணையில் அபாரமாக விளையாடிய பாபுல் குமார் இரட்டை சதம் விளாச, இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 538 ரன்கள் சேர்க்க, பீஹார் அணி 646 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து டிக்ளேர் செய்தது. இதே போன்று மும்பை, சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானே 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Recommended Video

Kohli கொடுத்த Gift வேண்டாம் என திருப்பி கொடுத்த Sachin
சர்ஃபிராஸ் கான்

சர்ஃபிராஸ் கான்

ஆனால் முன்னாள் அண்டர் 19 வீரர் சர்ஃபிராஸ் கான் தொடர்ந்து அபாரமாக விளையாடி 275 ரன்களை குவித்தார். கடைசி 9 இன்னிங்சில் சர்ஃபிராஸ் கான் 2 இரட்டை சதம், 1 முச்சதம் விளாசியுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் அவரை வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

Story first published: Friday, February 18, 2022, 19:33 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+