For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி போட்டியில் 1297 ரன்கள் குவித்த ஜார்க்கண்ட் அணி.. ரன் மழை பொழிந்த வீரர்கள்.. என்னா அடி!

கொல்கத்தா: ரஞ்சி போட்டியில் ஜார்கண்ட் அணி ரன்கள் மழை பொழிந்து சாதனை படைத்தது. நாகலாந்து அணிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜார்க்கண்ட், நாகலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நாகலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஜார்க்கண்ட் அணி முதலில் பேட் செய்தது.

இதனையடுத்து உக்கார் சிங், நசிம் சித்திக்கி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, குமார் சுரஜ் 66 ரன்களில் வெளியேறினார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

இதன் பின்னர், விராட் சிங், குமார் குஷ்காரா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி, ரன்களை சேர்த்தனர். விராட் சிங் சதம் விளாச, குமார் குஷ்காரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். 269 பந்துகளை எதிர்கொண்ட அவர் 266 ரன்கள் விளாசினார். இறுதியில் ஷபாஸ் நதீம் 177 ரன்களை விளாசினார்.

880 ரன்கள்

880 ரன்கள்

11வது வீரராக களமிறங்கிய ராகுல் சுக்லா 85 ரன்கள் அடிக்க, ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 880 ரன்களை குவித்தது. இதனையடுத்து நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.இதில் சேடன் பிஸ்ட் மட்டும் 122 ரன்கள் அடிக்க நாகலாந்து அணி 289 ரன்கள் மட்டுமே எடுத்தது. 591 ரன்கள் முன்னிலை பெற்ற ஜார்க்கண்ட் அணி, ஃபாலோ ஆன் செய்யாமல் மீண்டும் களமிறங்கியது.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

இதனையடுத்து ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 2வது இன்னிங்சிலும் ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் உட்கார்ஷ் சிங் 73 ரன்கள் எடுத்தார். 2வது இன்னிங்சில் அன்குல் ராய் 153 ரன்கள் விளாச, முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய குமார் குஷ்காரா 89 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.

1008 ரன்கள்

1008 ரன்கள்

ஜார்க்கண்ட் 2வது இன்னிங்சில் டிக்ளேர் செய்து, மீண்டும் நாகலாந்து அணியை விளையாட வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் தொடர்ந்து விளையாடி 417 ரன்கள் குவித்தது. இதனையடுத்து நாகலாந்து அணியை விட 1008 ரன்கள் ஜார்க்கண்ட் அணி முன்னிலை பெற்று, போட்டி டிராவில் முடிவடைந்தது.

Story first published: Wednesday, March 16, 2022, 18:19 [IST]
Other articles published on Mar 16, 2022
English summary
Ranji Trophy 2022 – Jharkhand Put 1297 Runs in a single match ரஞ்சி போட்டியில் 1297 ரன்கள் குவித்த ஜார்க்கண்ட் அணி.. ரன் மழை பொழிந்த வீரர்கள்.. என்னா அடி!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+