Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பைக்கான அணியில் இடம்பிடித்த அமைச்சர்.. கொரோனா நோயாளிகளுக்கும் இடம்

சென்னை: பி.சி.சி.ஐ. நடத்தும் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்கிறது. இதில் தமிழக அணி பி பிரிவில் கர்நாடகா, உ.பி. ரயில்வே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை அறிவித்துள்ளது. தற்போது பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ranji trophy 2022 State Minister Manoj tiwary and 6 Covid positive Player in West bengal

தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். மும்பை அணியில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அணி தேர்வில ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக இடம்பெற்றுள்ள மனோஜ் திவாரி, தற்போது மேற்கு வங்க ரஞ்சி அணியில் இடம்பெற்றுள்ளார்

மனோஜ் திவாரி, கடந்த 2019-20ஆம் ஆண்டு சீசனில் கடைசியாக ரஞ்சி கோப்பையில் விளையாடினார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் திவாரி, முதலமைச்சர் ஓப்புதல் வழங்கியதை அடுத்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தெரிவித்தார். கிரிக்கெட் எனது வாழ்க்கையுடன் இணைந்தது என்று குறிப்பிட்ட திவாரி, அதனால் தான் அரசியலுக்கு வந்தும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என்று தெரிவித்தார்.

இதனிடையே, மேற்குவங்க ரஞ்சி அணியில் கொரோனா பாதிக்கப்பட்ட 6 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் மேற்கு வங்க அணியின் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது வீரர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர், வீரர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் குணமடைந்துவிடுவார்கள் என்று பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, January 4, 2022, 20:29 [IST]
Other articles published on Jan 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+