Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வரலாற்றிலேயே பிரம்மாண்ட சாதனை.. ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய அன்ஷுல் கம்போஜ்

ஹரியானா: இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார் இளம் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ். தற்போது 2024 - 25 ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஹரியானா மாநில அணிக்காக வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் விளையாடி வருகிறார்.

அவர் கேரளா அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்துவது அரிய சாதனை ஆகும். அத்தனை எளிதில் இந்த சாதனையை செய்ய முடியாது. அதை செய்து இருக்கிறார் அன்ஷுல் கம்போஜ்.

ranji trophy

ரஞ்சி டிராபி தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். கேரளா அணியை 291 ரன்களுக்கு அவர் வீழ்த்தி இருக்கிறார். அந்த அணியின் 10 விக்கெட்களையும் அவரே வீழ்த்தினார். 30.1 ஓவர் வீசி 49 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்களை வீழ்த்தினார் அன்ஷுல் கம்போஜ். இதில் 9 மெய்டன் ஓவர்களையும் அவர் வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சையும் வர பதிவு செய்து இருக்கிறார். இதற்கு முன் ரஞ்சி டிராபி தொடரில் மோகன் சட்டர்ஜி மற்றும் பிரதீப் சுந்தரம் ஆகிய இருவரும் ஒரே இன்னிங்க்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். மோகன் சட்டர்ஜி 1956 - 57 ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக இந்த சாதனையை செய்து இருந்தார். பிரதீப் சுந்தரராம் ராஜஸ்தான் அணிக்காக 1985 - 86 ரஞ்சி டிராபி தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

ரஞ்சி கோப்பை தொடரில் ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சு -

10 / 20 - மோகன் சட்டர்ஜி - பெங்கால் x அசாம் (1956-57)
10 / 49 - அன்ஷுல் கம்போஜ் - ஹரியானா x கேரளா (2024-25)
10 / 78 - பிரதீப் சுந்தரம் - ராஜஸ்தான் x விதர்பா (1985-86)

ஒட்டுமொத்தமாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தும் ஆறாவது இந்திய பந்து வீச்சாளராகவும் சாதனை படைத்து இருக்கிறார் அன்ஷுல் கம்போஜ். அனில் கும்ப்ளே, சுபாஷ் குப்தே, டெபாசிஸ் மொஹண்டி ஆகியோரும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.

முதல் தர கிரிக்கெட்டில் 10 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் :

10 / 20 - மோகன் சட்டர்ஜி - பெங்கால் x அசாம் (1956-57)
10 / 46 - டெபாசிஸ் மொஹண்டி - கிழக்கு மண்டலம் x தெற்கு மண்டலம் (2000-01)
10 / 49 - அன்ஷுல் கம்போஜ் - ஹரியானா x கேரளா (2024-25)
10 / 74 - அனில் கும்ப்ளே - இந்தியா x பாகிஸ்தான் (1999)
10 / 78 - பிரதீப் சுந்தரம் - ராஜஸ்தான் x விதர்பா (1985-86)
10 / 78 - சுபாஷ் குப்தே - பாம்பே x பாகிஸ்தான் ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் பஹவல்பூர் XI (1954-55)

Story first published: Friday, November 15, 2024, 13:15 [IST]
Other articles published on Nov 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+