ரஞ்சி கிரிக்கெட்டில் 606 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை.. ஒரே இன்னிங்சில் 2 வீரர்கள் முச்சதம்!
மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோவா வீர்கள் இரண்டு பேர் ஒரே இன்னிங்ஸில் முச்சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் மூன்றாவது இன்னிங்ஸில் இந்த ஜோடி 606 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து சாதனை படைத்திருக்கிறது.
இன்னும் 19 ரன்கள் கூடுதலாக அவர்கள் அடித்திருந்தால், உலக சாதனையை அவர்கள் முறியடித்திருக்கலாம். ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்சில் 84 ரன்களில் ஆட்டம் இழந்தது. கோவா அணிக்காக விளையாடிய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து கோவா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் களமிறங்கியது. இசான் கதேக்கர் 3 ரன்களிலும், சுயாஸ் பிரபுதேசாய் 73 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
கோவா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு கஷ்யாப் மற்றும் சினேகால் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அருணாச்சல பிரதேஷ் வீரர்கள் தடுமாறினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கஷ்யாப் 269 பந்துகளில் முச்சதத்தை விளாசினார்.
மறுமுனையில் சினேகால் 45 பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் விளாசி 215 பந்துகளில் 314 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 606 ரன்கள் சேர்த்து இருந்தது. அப்போது கோவா அணி கேப்டன் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 727 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் கோவா கேப்டன் இன்னிங்சை டிக்ளர் செய்தார்.
இந்த ஜோடி மேலும் 19 ரன்கள் எடுத்திருந்தால் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பார்ட்னர்ஷிப் சேர்த்த ஜெயவர்த்தனே சங்கக்காரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2006ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் 624 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி முறியடித்திருக்க முடியும். இதை எடுத்து அருணாச்சல பிரதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 92 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் கோவா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 551 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று இருக்கிறது.


Click it and Unblock the Notifications