Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களமிறங்காமலேயே தோற்ற அருணாச்சல பிரதேசம்.. ரஞ்சி தொடரில் வெடித்த மோதல்.. வீரர்கள் அதிர்ச்சி

அகமதாபாத்: அருணாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தில் ஏற்பட்ட கடுமையான கோஷ்டி பூசல் மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக, 2026 ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டியில் அருணாச்சல பிரதேச அணி களமிறங்கவில்லை. இதை அடுத்து அந்த அணி போட்டியில் ஆடாமல் தோற்றது.

2026-27 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் தொடங்கியது. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேட் பிரிவு தொடக்க ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து அணிகள் மோதவிருந்தன. நாகாலாந்து வீரர்கள் மைதானத்திற்கு வந்து தயாராக இருந்த நிலையில், அருணாச்சல பிரதேச அணி விளையாட வராமல் போட்டியை முழுமையாகப் புறக்கணித்தது.

Ranji Trophy Arunachal Pradesh Forfeits First Ranji Trophy Match Due to Administrative Infighting and Court Case

மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் நபம் விவேக் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மாவட்ட சங்கங்கள் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், வீரர்களைத் தேர்வு செய்ய தகுதியான நிர்வாகம் அங்கு செயல்படவில்லை.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், "நீதிமன்றத் தடை உத்தரவு இருப்பதால் பிசிசிஐ இதில் நேரடியாகத் தலையிட முடியாது. நீதிமன்றம் அனுமதி அளிக்கும் வரை எங்களால் மாற்று ஏற்பாடுகளையும் செய்ய இயலாது" என்று தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசம் போட்டியிலிருந்து தானாக விலகியதால், பிசிசிஐ விதிகளின்படி நடப்பு சீசன் முழுவதும் அருணாச்சல பிரதேச அணி இடைநீக்கம் செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது. முன்னதாக வினோ மன்கட் கோப்பை போட்டியிலும் அந்த மாநிலத்தின் 19 வயதுக்குட்பட்டோர் அணி இதே காரணத்தால் களமிறங்க முடியாமல் போனது.

"இந்த ஒரு விஷயம் இருந்தால் இந்தியா ஈஸியா உலகக்கோப்பை ஜெயிக்கும்".. சுட்டிக்காட்டிய வீரேந்தர் சேவாக்

நிர்வாகிகளின் அதிகார மோதலால் தங்களது கிரிக்கெட் எதிர்காலம் பாழாகிவிட்டதாக அருணாச்சல பிரதேச வீரர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். "எங்களின் விளையாட்டு வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. யாரை அணுகுவது என்றே புரியவில்லை" என்று முன்னாள் கேப்டன் கம்ஷா யாங்போ ஆதங்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 18-ஆம் தேதி சிக்கிம் அணிக்கு எதிரான 2-வது போட்டியிலும் அருணாச்சல பிரதேசம் ஆடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Story first published: Sunday, October 11, 2026, 13:16 [IST]
Other articles published on Oct 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+