Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 சிக்ஸ், 14 பவுண்டரி.. 87 பந்துகளில் சதம் விளாசிய ருதுராஜ்.. மும்பையை பொளந்து கட்டிய கேப்டன்!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 87 பந்துகளில் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். நீண்ட மாதங்களாக சதமடிக்க முடியாமல் போராடி வந்த ருதுராஜ் கெய்க்வாட், ஒரு வழியாக சதம் விளாசி ஃபார்முக்கு வந்திருப்பது அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டவர் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால் காய்ச்சல் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலக, பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ டெஸ்ட் போட்டிக்கு தயாராக பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

ranji trophy ruturaj gaikwad csk

இதன் காரணமாகவே துலீப் டிராபி, இராணி கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கேப்டன்சி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த இரு தொடர்களிலும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும்படி செயல்படவில்லை. சில அரைசதங்கள் மட்டுமே விளாசி இருந்தாலும், அவரிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட மூன்று இலக்க ஸ்கோர் வரவே இல்லை.

இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் பயணிக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக களமிறங்கினார். மும்பை அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரா அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 441 ரன்களை குவித்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய மகாராஷ்டிரா அணி அபாரமாக விளையாடியது. அதிலும் நம்பர் 3ல் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது நாள் ஆட்டம் முடிவில் ருதுராஜ் கெய்க்வாட் 80 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தையும் அதிரடியாக தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 87 பந்துகளில் அபார சதம் விளாசி அசத்தியுள்ளார். 87 பந்துகளில் 2 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட அதிரடி சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட்-ன் ஸ்ட்ரைக் ரேட் 115ஆக உள்ளது. மிகவும் முக்கியமான நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக முன் நின்று அபார சதம் விளாசி இருப்பது தேர்வு குழுவின் பார்வையை திருப்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா பயணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, October 20, 2024, 12:38 [IST]
Other articles published on Oct 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+