For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சிஎஸ்கேவுக்கு தர்ம அடி”.. ரஞ்சிக்கோப்பையில் பதில் சொன்ன ஷாருக்கான்.. அதிரடி சதத்தால் வியப்பு!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பணத்திற்காக தன்னை ஏலம் எடுக்காமல் போனது தவறு என தமிழக வீரர் ஷாருக்கான் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுப்பதற்காக ஐபிஎல் மெகா ஏலத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

குறிப்பாக அவரை கடந்த சில மாதங்களாகவே உன்னிப்பாக கவனித்து வந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி. இதனால் சிஎஸ்கேவுக்கு தான் செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏலத்தில் கடும் போட்டி

ஏலத்தில் கடும் போட்டி

அடிப்படை தொகை ரூ.40 லட்சம் என ஏலம் விடப்பட்ட ஷாருக்கானை வாங்க தொடக்கம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் முனைப்பு காட்டியது. இதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தொகையை அதிகரித்து மோதியது. ஆனால் வழக்கம் போல ரூ.5 கோடி தாண்டியவுடன் ஒதுங்கிக்கொண்டது. இறுதியில் ரூ. 9 கோடிக்கு பஞ்சாப் அணி மீண்டும் ஷாருக்கானை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

தவறவிட்ட சென்னை அணி

தவறவிட்ட சென்னை அணி

சென்னை அணியின் எதிர்காலத்திற்கு ஷாருக்கான் நிச்சயம் தேவைப்படும் வீரராக இருக்கிறார். ஏனென்றால் ஷாருக்கான் ஒரு அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அதுவும் சூழலை புரிந்து அதற்கேற்றவாரு ஆடுவார். தோனிக்கு அடுத்தப்படியாக ஒரு நல்ல ஃபினிஷர் அந்த அணிக்கு தேவை. இதன் அடிப்படையில் தான் அவரை சிஎஸ்கே தவறவிட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு பாடம்

சிஎஸ்கேவுக்கு பாடம்

இந்நிலையில் சிஎஸ்கே செய்தது பெரும் தவறு என ஷாருக்கான் நிரூபித்துள்ளார். ரஞ்சிக்கோப்பை தொடரில் இன்று தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் டெல்லி அடித்த 452 ரன்களை கடப்பதற்காக களமிறங்கிய தமிழக அணி 162 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

 அட்டகாச சதம்

அட்டகாச சதம்

அப்போது களமிறங்கிய ஷாருக்கான், தனது அதிரடி ஆட்டத்தால் அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தார். சற்றும் பதற்றமும் இன்றி விளையாடிய அவர், 89 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசிய அவர் சதமடித்து அசத்தினார். அதன் பின்னர் சதத்துடனும் தனது அதிரடியை அவர் நிறுத்தவில்லை. 113 பந்துகளில் 150 ரன்களை விளாசினார்.

வியந்துப்போன வீரர்கள்

வியந்துப்போன வீரர்கள்

ரஞ்சிக்கோப்பை என்பது இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டியாகும். இதில் வீரர்கள் நிதானமாக விளையாடுவதை பார்த்திருப்போம். ஆனால் 132.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் நாலாபுறமும் பவுண்டரிகளை விளாசி வரும் ஷாருக்கை பார்த்து சக வீரர்கள் வியந்துள்ளனர். இரட்டை சதம் அடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, February 19, 2022, 16:04 [IST]
Other articles published on Feb 19, 2022
English summary
Shahrukh Khan gives a strong answer to CSK by Rescue tamilnadu team by Massive tons against delhi team in Ranji trophy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+