இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறை.. 299 ரன்களில் அவுட்டான பெங்கால் வீரர்.. ரஞ்சி கோப்பையில் சோகம்
மும்பை: ரஞ்சி டிராபி காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசத்திற்கு எதிராக 299 ரன்களில் ஆட்டமிழந்து, பெங்கால் அணியின் சுதீப் காரமி, முதல் தர கிரிக்கெட்டில் முச்சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட முதல் இந்திய வீரர் ஆனார். இது ஒரு கசப்பான சாதனையாகும்.
பெங்கால் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், காரமி ஒரு ரன்னில் முச்சத வாய்ப்பை இழந்தார். 596 பந்துகளுக்குப் பிறகு ஆந்திராவின் ஷேக் ரஷீத் அவரை பவுல்டு செய்தார். அவர் வெளியேறியபோது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வழியனுப்பினர்.

முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 299 ரன்களில் ஆட்டமிழந்த மூன்றாவது வீரர் சுதீப் காரமி ஆனார். இதற்கு முன்னர், நியூசிலாந்து ஜாம்பவான் மார்ட்டின் குரோவ் 1990-91ல் இலங்கைக்கு எதிராகவும், கிளாமோர்கனின் மைக் பவல் 2006ல் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதே ரன்களில் வெளியேறினர்.
முதலில் ஆடிய ஆந்திரப் பிரதேசம், முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்த 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்குப் பதிலடியாக பெங்கால் அணி 629 ரன்கள் குவித்தது. 3வது வீரராக இறங்கிய காரமியின் 299 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 596 பந்துகளுடன், இந்தியர் ஒருவர் முதல் தரப் போட்டியில் எதிர்கொண்ட ஆறாவது அதிக பந்துகளின் எண்ணிக்கையாகும்.
26 வயதான சுதீப் காரமி, சச்சின் டெண்டுல்கரின் ஆதர்ச ரசிகர் ஆவார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட சராசரியுடன் சிறப்பான சாதனை படைத்துள்ளார். 2022-23 ரஞ்சி சீசனில் 800-க்கும் அதிகமான ரன்களையும், 2025 பெங்கால் ப்ரோ டி20 லீக்கில் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராகவும் திகழ்ந்தார் இதனிடையே மத்திய பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் ஜம்மு காண்மீர் அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில் காஷ்மீர் வீரர் ஆகிப் நபி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.


Click it and Unblock the Notifications