Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படிக் கஷ்டப்படுறதுக்கு பேசாம ஷேவாக் ஓய்வு பெற்று விடலாம்!

டெல்லி: தொடர்ந்து ரன் குவிக்கப் போராடி வருகிறார் வீரேந்திர ஷேவாக். இதனால் இந்திய அணியில் இடமிழந்த ஷேவாக், அடுத்து தனது டெல்லி ரஞ்சி அணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயகரமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.

மோசமான நிலையிலிருந்து படு மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார் ஷேவாக் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஷேவாக்கின் ஆட்டத்திலும் சரி, அவரது நுணுக்கங்களிலும் சரி எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

ரஞ்சி சீசனில் சொதப்பல்

ரஞ்சி சீசனில் சொதப்பல்

நடப்பு ரஞ்சி தொடரில் ஷேவாக் தொடர்ந்து சொதப்பலாக ஆடி வருகிறார். இதுவரை அவர் மத்தம் 6 இன்னி்ங்ஸ்களில் ஆடியுள்ளார்.

50 ரன் கூட எடுக்க முடியவி்ல்லை

50 ரன் கூட எடுக்க முடியவி்ல்லை

இதில் ஒரு முறை கூட அவர் அரை சதம் போடவில்லை. மாறாக, 1, 15, 9, ஆட்டமிழக்காமல் 35, 3, 6 என்று சொதப்பலாகவே ஆடியுள்ளார்.

அபாயகரமான ஷேவாக்கா இது...

அபாயகரமான ஷேவாக்கா இது...

ஒரு காலத்தில் ஷேவாக் அபாயகரமான சர்வதேச கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். ஆனால் ரஞ்சிப் போட்டிகளில் அவர் விளையாடும் விதம் அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது. அப்படி ஒரு மோசமான பார்மை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

கம்பீர் பரவாயில்லை

கம்பீர் பரவாயில்லை

ஷேவாக்கோடு சேர்த்து இந்திய அணியில் இடம்இல்லாமல் போன கெளதம் கம்பீர் பரவாயில்லை. சற்றே தனது பழைய பார்முக்குத் திரும்புவதற்கான அறிகுறிகளை அவர் வெளிப்படுத்தி வருகிறார். ஒரு சதம் போட்டுள்ளார் இந்த சீசனில் கம்பீர்.

2012 முதலே

2012 முதலே

ஷேவாக் 2012ம் ஆண்டிலிருந்தே பார்ம் இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஷேவாக்குக்கு கடைசியாக வாய்ப்பு கிடைத்தது. அதில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் ஷேவாக்.

ஷேவாக்கால் திணறும் டெல்லி

ஷேவாக்கால் திணறும் டெல்லி

ஷேவாக் சரியாக விளையாட முடியாமல் திணறி வருவதால் அவரது டெல்லி அணியும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம்பிக்கையி்ல்லாமல் ஆடுகிறார்

நம்பிக்கையி்ல்லாமல் ஆடுகிறார்

ஷேவாக்கின் திணறல் குறித்து டெல்லி அணியின் தலைமைத் தேர்வார் சேட்டன் சவுகான் கூறுகையில், ஷேவாக்கிடம் தற்போது நம்பிக்கை இல்லை. அவர் பேட்டிங்கில் தடுமாற அதுவே காரணம். அவர் ஒரே ஒரு நல்ல ஸ்கோரை எடுத்து விட்டால் போதும், பழைய பார்முக்குத் திரும்பி விடுவார் என்றார்.

Story first published: Sunday, November 24, 2013, 13:44 [IST]
Other articles published on Nov 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+