
இங்கிலாந்தை சுருட்டினார்
அந்த நேரத்தில்தான், 49வது ஓவரை வீச வந்தார், ருபேல் ஹொசைன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பிராடை கிளீன் பௌல்ட் ஆக்கி வெளியேற்றினார் ருபேல். கடைசி விக்கெட்டாக களமிறங்கினார் ஆன்டர்சன். ஓவரின் 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. அரங்கமெங்கும் டென்ஷன். ஓவரின் 3வது பந்தில் ஆன்டர்சனை கிளீன் பௌல்ட் ஆக்கினார் ருபேல். அவ்வளவுதான், இங்கிலாந்தின் ஆட்டம் குளோஸ்.

சிறப்பான பவுலிங்
கடைசி இரு விக்கெட்டுகளும், ஏனோ..தானோ பந்து வீச்சில் விழவில்லை. மிகவும் லாவகமாக ஸ்விங் செய்யப்பட்ட பந்துகள் அவை. இத்தனைக்கும், அதற்கு முந்தைய ஓவரில்தான் ஸ்டூவர் பிராட் சிக்சர் பறக்கவிட்டிருந்தார். இந்நிலையில்தான், டென்ஷன் ஆகாமல், விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ருபேல் ஹொசைன்.

4 விக்கெட்டுகள்
முன்னதாக, பெல் மற்றும், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் ருபேல் வீழ்த்தி, 4 விக்கெட்டுகளை தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ருபேல் ஹொசைன், பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் பெற்று வந்து இவ்வளவு கூலாக விளையாடினார் என்பதுதான் உண்மை.

நடிகை பாலியல் புகார்
19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

சிறையில் அடைப்பு
உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய கடந்த ஜனவரி 8ம்தேதி டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது கோர்ட். இதையடுத்து ருபேல் போலீசில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீனில் வெளியே வந்தவர்
இந்நிலையில் ஜனவரி 11ம்தேதி கோர்ட் அவரை ஜாமீனில் வெளியே விட்டது. ஜாமீனில் வெளியே வந்த ருபேல் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்பட்டு வந்தார். வங்கதேசத்துக்காக உலக கோப்பை போட்டிகளில் களமிறங்கி ஆடியும் வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்த ருபேல், வங்கதேசத்தில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.

நடிகை பல்டி
ருபேல் மீதான கிரேஸ் காரணமாக, அவருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த நடிகையை ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரு பிரபலத்தை அசிங்கப்படுத்துவதா என்று வங்கதேச மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், வழக்கை வாபஸ் பெறப்போவதாக நஸ்னின் கூறியுள்ளார். ருபேலுக்கு எதிராக உள்ள எந்த ஆதாரத்தையும், நான் கோர்ட்டில் சமர்ப்பிக்க போவதில்லை. இந்த வழக்கை நீர்த்துப்போக செய்ய வைப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

என்ன ஒரு லாஜிக்
நஸ்னினின் வழக்கறிஞர், டெபுல் டேய் கூறுகையில், "நாட்டுக்காக விளையாடி வரும் ஒரு வீரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரது ஆட்டத்திறனை பாதிக்க காரணமாக இருந்துவிட கூடாது என்பதற்காக, இந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்" என்றார்.
கிரிக்கெட் வீரர் ஒருவர் சிறப்பாக ஆடியதற்கும், அவர் செய்த குற்றச்செயலுக்கும் என்ன தொடர்பு என்பது நடுநிலைவாதிகளுக்கு புரியவில்லை. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டுமே, பிரபலங்களுக்கு ஒரு சட்டம், சாமானியர்களுக்கு ஒரு சட்டம் என்பது போன்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது என்று சாடுகின்றனர் சமூக நோக்கர்கள்.
அப்போ.. 4 விக்கெட் எடுத்தா, ஒரு பலாத்காரம் இலவசம் என்று சொல்ல வாறீங்க, அப்படித்தானே நஸ்னின் மேடம்?


Click it and Unblock the Notifications











