Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேர்ல்டு கப் ஜெயிச்சா தான் கல்யாணம்.. விஷால் போலவே அறிவித்து அதிர வைத்த பிரபல கிரிக்கெட் வீரர்

காபூல் : கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பெரும் பரபரப்பை கிளப்பினார் நடிகர் விஷால்.

நடிகர் சங்கத் தேர்தலில் நின்ற அவர் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக மண்டபம் கட்டிய பின்னரே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்தார்.

அதே மண்டபத்தில் தான் தன் திருமணமும் நடைபெறும் என்றும் அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

அதே போல அறிவிப்பு

அதே போல அறிவிப்பு

அதே போலவே, தற்போது ஒரு கிரிக்கெட் வீரர் அறிவித்துள்ளார். தன் நாட்டுக்கு உலகக்கோப்பை பெற்றுக் கொடுத்த பின் தான் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்துள்ளார். அவர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் அந்த வீரர்?

யார் அந்த வீரர்?

ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு திகைக்க வைத்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் கிரிக்கெட் உலகையே தன் சுழற் பந்துவீச்சு மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ரஷித் கான்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஆப்கானிஸ்தான் அணிக்காக ஆடி வந்தவர் அவரின் திறமையால் உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் இடம் பெற்றார். ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார். அவர் ஆடாத கிரிக்கெட் லீக்-கே இல்லை என கூறும் அளவுக்கு பல கிரிக்கெட் லீக்-களில் இடம் பெற்றுள்ளார்.

மையப் புள்ளி

மையப் புள்ளி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு ரஷித் கான் தான் மையப் புள்ளி என்பதை மறுக்க முடியாது. அவரை வைத்தே ஆப்கானிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சாளர்களை மையமாக கொண்ட அணியாக மாறியது.

முதல் இடம்

முதல் இடம்

ரஷித் கான் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 749 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணி டி20 போட்டிகளில் முதல் பத்து இடங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அணி டி20 உலகக்கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை வென்ற பின்..

உலகக்கோப்பை வென்ற பின்..

இந்த நிலையில், ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் உலகக்கோப்பை வென்று கொடுத்த பின்னரே தான் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொள்வேன் என ஆசாதி ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

விஷால் திருமணம்

விஷால் திருமணம்

நடிகர் விஷால் இன்னும் அந்த மண்டபத்தை கட்டி முடிக்கவில்லை. அதே போல அவருக்கு திருமணமும் இன்னும் நடைபெறவில்லை. எனினும், விஷால் எடுத்த சபதம் அவரை நடிகர் சங்க பொதுச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பல்வேறு உயர் பதவிகளை அவருக்கு கொடுத்தது.

அவரால் முடியும்

அவரால் முடியும்

ரஷித் கான் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்காக 7 டெஸ்ட், 67 ஒருநாள் போட்டிகள், 48 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மொத்தமாக அவர் 200 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க ஒரு வீரரால் முடியும் என்றால் அது நிச்சயம் ரஷித் கான் தான். ரஷித் கான் எந்த உலகக்கோப்பை முடிந்த உடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரோ?!

Story first published: Sunday, July 12, 2020, 17:33 [IST]
Other articles published on Jul 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+