என்ன பாஸ் யோசனையெல்லாம் பலமா இருக்கு.. கேள்வி கேட்ட ரஷீத்... சஹலோட பதிலை பாருங்க!
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய தொடரையொட்டி இந்திய அணி வீரர்கள் சிட்னியில் குவாரன்டைனில் உள்ளனர்.
பயிற்சிகள் மற்றும் சமூகவலைதளங்கள் என்று அவர்களின் பொழுது சிறப்பாக கழிகிறது.
இந்நிலையில் சஹல் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் குறித்து ரஷீத் கான் கேள்வி எழுப்ப, அதற்கு சஹல் பதிலளித்த நிகழ்வு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியது.
இந்தியா -ஆஸ்திரேலியா தொடர்கள்
குவாரன்டைனில் இந்திய வீரர்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய தொடரையொட்டி இந்திய அணி வீரர்கள் சிட்னியில் குவாரன்டைனில் உள்ளனர். 14 நாட்கள் குவாரன்டைன் அவர்களை மிகவும் கடுப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆயினும் பயிற்சி போட்டிகள் மற்றும் சமூக வலைதளங்கள் அவர்களை பரபரப்பாக வைத்துள்ளது.

குவாரன்டைனில் இந்திய வீரர்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய தொடரையொட்டி இந்திய அணி வீரர்கள் சிட்னியில் குவாரன்டைனில் உள்ளனர். 14 நாட்கள் குவாரன்டைன் அவர்களை மிகவும் கடுப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆயினும் பயிற்சி போட்டிகள் மற்றும் சமூக வலைதளங்கள் அவர்களை பரபரப்பாக வைத்துள்ளது.

ரஷீத் கான் கேள்வி
இந்நிலையில் பயிற்சிக்கு பின்பு தான் தன்னுடைய படுக்கையில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்படியான புகைப்படத்தை யுஸ்வேந்திர சஹல் தன்னடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த லெக் ஸ்பின்னர் ரஷீத் கான், "என்ன பாஸ் யோசனையெல்லாம் பலமா இருக்கு?" என்று இந்தியில் கேள்வி எழுப்பினார்.

சஹலின் பதில்
இந்த கேள்விக்கு இந்தியிலேயே பதிலளித்த சஹல், வேற என்ன பாஸ் யோசிக்கப் போறேன், இந்த குவாரன்டைன் எப்போதான் முடியுமோன்னு யோசிக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். மேலும் சிரிப்பு எமோஜிகளையும் அதில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த அளவிற்கு குவாரன்டைன் வீரர்களை வாட்டி வருகிறது.

சஹல் 21... ரஷீத் 20
யுஸ்வேந்திர சஹல் மற்றும் ரஷீத் கான் இருவரும் ஐபிஎல்லில் தங்களது அணிகளுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். சஹல் 21 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ரஷீத்கானின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எலிமினேட்டர் சுற்றில் சஹலின் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications