Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 பந்துகளில் 4 விக்கெட்கள்.. அப்ரிடி, மலிங்கா சாதனை காலி.. தெறிக்க விட்ட ரஷித் கான்!

டேராடூன் : ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சாதனை செய்து அசத்தியுள்ளார்.

அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ள ரஷித் கான், மலிங்காவின் குறிப்பிட்ட சாதனையை தானும் செய்து அசத்தியுள்ளார்.

அசத்தல் வெற்றிகள்

அசத்தல் வெற்றிகள்

ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. அதில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது ஆப்கன்.

4 பந்துகள் 4 விக்கெட்கள்

4 பந்துகள் 4 விக்கெட்கள்

மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார் ரஷித் கான். இதில் முதல் நான்கு விக்கெட்களை தொடர்ந்து நான்கு பந்துகளில் வீழ்த்தி அசத்தல் சாதனை செய்தார். இதற்கு முன் இலங்கையின் லசித் மலிங்கா மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

ஆப்கன் அணி நிர்ணயித்த 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடி வந்தது அயர்லாந்து. 16வது ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 18வது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் தொடர்ந்து மூன்று விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்தார்.

ஐந்து விக்கெட்கள்

ஐந்து விக்கெட்கள்

ஹாட்ரிக் சாதனையுடன், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள் என்ற சாதனையையும் தன் வசமாக்கினார் ரஷித் கான். மேலும், 20வது ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி விக்கெட் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்திக் கொண்டார்.

அதிக விக்கெட்கள்

அதிக விக்கெட்கள்

இந்த போட்டியில் எடுத்த ஐந்து விக்கெட்களோடு சேர்த்து ரஷித் கான் டி20 போட்டிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக மட்டும் 24 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்த எண்ணிக்கையின் மூலம் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ரஷித் முதல் இடம்

ரஷித் முதல் இடம்

அப்ரிடி, டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 21 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அந்த பட்டியலில் அப்ரிடியை முந்தி 24 விக்கெட்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரஷித் கான்.

Story first published: Tuesday, February 26, 2019, 17:35 [IST]
Other articles published on Feb 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+