For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“10 மாதங்களில் இரண்டு கல்யாணம்”.. வாய்க்கு வந்தபடி பேசாதீங்க என ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் பதிவு

மும்பை: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், தனது இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களாக தொண்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் பரவியது.

அவர் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாகப் பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, "அவர் என் மனைவிதான், இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. தயவுசெய்து தவறான அனுமானங்களைச் செய்யாதீர்கள்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Rashid Khan confirms his Second Marriage His First Marriage happened in October 2024

சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற 'ரஷித் கான் தொண்டு அறக்கட்டளை' தொடக்க விழாவில், ரஷித் கான் ஒரு பெண்ணுடன் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண், தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு விதிகளை மீறி, தலையில் முக்காடு அணியாமல் பாரம்பரிய ஆப்கான் உடையில் இருந்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

அந்தப் பெண் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்களும், ரஷித் கான் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவின. அவர் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக திருமணம் செய்து கொண்டு இருந்தார். அதற்குள் இரண்டாவது திருமணமா? மனைவி இல்லையென்றால் அந்த பெண் யார்? என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் பல்வேறு ஊகங்களை வெளியிட்டு வந்தனர்.

வாரக்கணக்கில் நீடித்த இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரஷித் கான் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் கூடிய விரிவான விளக்கத்தை வெளியிட்டார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது: "2025, ஆகஸ்ட் 2-ம் தேதி, என் வாழ்க்கையின் புதிய மற்றும் அர்த்தமுள்ள அத்தியாயத்தைத் தொடங்கினேன். நான் விரும்பிய அன்பு, அமைதியை உள்ளடக்கிய ஒரு பெண்ணை நிக்காஹ் (நிக்கா) செய்து கொண்டேன்.

சமீபத்தில் ஒரு தொண்டு நிகழ்ச்சிக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். அத்தகைய ஒரு எளிய விஷயத்தில் இருந்து தவறான அனுமானங்கள் செய்யப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உண்மை வெளிப்படையானது, அவர் என் மனைவி. நாங்கள் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவையும், புரிதலையும் காட்டிய அனைவருக்கும் நன்றி." இவ்வாறு ரஷித் கான் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

10 மாதங்களில் இரண்டாவது திருமணம்

தனது இரண்டாவது மனைவியின் தனியுரிமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், ரஷித் கான் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை. 26 வயதான ரஷித் கான், தனது முதல் திருமணத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 2024-ல் தனது தாய்மாமன் மகளுடன் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காபூலில் உள்ள இம்பீரியல் கான்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற அந்தப் பிரம்மாண்ட திருமண விழாவில், ரஷித் கானுடன் அவரது மூன்று சகோதரர்களான அமீர் கலீல், ஜகியுல்லா மற்றும் ரஸா கான் ஆகியோருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது. அந்த விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் முகமது நபி உள்ளிட்ட சக வீரர்கள் கலந்துகொண்டனர்.

முதல் திருமணம் முடிந்து சுமார் 10 மாதங்களில், ஆகஸ்ட் 2025-ல் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். இதன்மூலம், அவரைச் சுற்றி வலம் வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Story first published: Wednesday, November 12, 2025, 14:49 [IST]
Other articles published on Nov 12, 2025
English summary
Rashid Khan confirms his Second Marriage; His First Marriage happened in October 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+