Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதை" கேட்டாலே நடுங்கும் ரஷீத் கான்.. இந்திய கேப்டனுக்கும்.. இந்த "யதார்த்தம்" புரியுமா?

மும்பை: தனிப்பட்ட கிரிக்கெட் பெர்ஃபாமன்ஸ் பாதிக்கப்படும் என்று கேப்டன் பதவியை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் ரஷீத் கான். இதன் மூலம் மற்ற அணிகளுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார்? குறிப்பாக இந்தியாவுக்கு..?

ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷீத் கானை நியமிக்க, அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் அவரை அணுகியது. ஆனால் அவரோ கறாராக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

அதற்கு அவர் சொன்ன காரணம், 'கேப்டன் பதவியேற்றால் எனது தனிப்பட்ட கிரிக்கெட் ஆட்டம் பாதிக்கப்படும்' என்பது தான்.

விலகி இருக்கிறேன்

விலகி இருக்கிறேன்

இதுகுறித்து அவர், "நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பது என் மனதில் மிகவும் தெளிவாக உள்ளது. நான் துணை கேப்டன் ரோலில் நன்றாக செயல்படுகிறேன். தேவையான இடங்களில் நான் கேப்டனுக்கு உதவுகிறேன். ஆகையால், நான் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது தான் எனக்கு நல்லது. நான் ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக பங்காற்ற விரும்புகிறேன். ஒரு கேப்டனாக இருப்பதைப் பற்றி நான் சிந்திப்பதை விட எனது செயல்திறன் அணிக்கு சற்று முக்கியமானது" என்று ESPNcricinfo-விடம் ரஷீத் கூறியுள்ளார்.

கிரண் மோரே கருத்து

கிரண் மோரே கருத்து

அதவாது, 'கேப்டனா விளையாடினா எனது தனிப்பட்ட ஆட்டத்திறன் பாதிக்கும்' என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ரஷீத் கான். இதைத் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே கூறியிருந்தார். அதாவது, இந்திய அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு விரைவில் ரோஹித் ஷர்மாவுக்கு கிடைக்கலாம்' என்று தெரிவித்திருந்தார்.

இன்னும் எவ்வளவு காலம்

இன்னும் எவ்வளவு காலம்

கிரண் மோரே இந்த கருத்தை முன்வைத்ததன் நோக்கம், "இந்திய கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கு, வெவ்வேறு கேப்டன்கள் தேவை" என்பதற்காகவே. இதன் மூலம், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்படும் விராட் கோலியின் பிரஷரை குறைக்க முடியும். அவரது ஆட்டத்திறனும் பெரியளவில் பாதிக்கப்படாது. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோலியும் சிந்திப்பார்" என்று கூறியிருந்தார்.

சாதித்த ரஹானே

சாதித்த ரஹானே

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் கேப்டன்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவில், டிம் பெய்ன் மற்றும் ஆரோன் ஃபின்ச் கேப்டன்களாக செயல்படுகின்றனர். இதேபோன்ற அணுகுமுறை இந்தியாவில் ஒர்க் அவுட் ஆகும் என்கிறார் கிரண் மோரே. டெஸ்ட் கிரிக்கெட்டில், அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக இருக்க, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் துணை கேப்டனாக செயல்படுகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸி., மண்ணில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா மெகா தோல்வி அடைய, ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

அணிக்கு எது நல்லது?

அணிக்கு எது நல்லது?

அதுமட்டுமின்றி, ரோஹித்தும், டி20 போட்டிகளில் தலைசிறந்த கேப்டனாக செயல்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. எனவே, டெஸ்ட் அணியை ரஹானேவும், டி20 அணியை ரோஹித்தும் வழிநடத்தும் பட்சத்தில், ஒருநாள் கிரிக்கெட் அணியை விராட் கோலி நடத்தலாம் என்பதே 'ஸ்ப்லிட் கேப்டன்சி'யை விரும்பும் கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. கிரண் மோரே உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களின் கருத்தும் அதுவே. எனினும், ஒற்றை ஆளுமையை விராட் கோலியை தொய்வின்றி சிறப்பாக செயல்பட முடியும் என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படியோ.. இந்திய கிரிக்கெட் அணியின் நலனுக்கு எது நல்லது என்றாலும் அதை ஏற்றுக் கொள்வது தான் சரி.

Story first published: Friday, June 4, 2021, 13:12 [IST]
Other articles published on Jun 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+