For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க புள்ளீங்கோ எதையும் செய்வார்கள் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் பெருமை

Recommended Video

பிக் பாஷ் தொடரில் ரஷீத் கான் பிடித்த அசத்தல் கேட்ச் | Rashid Khan's impressive Catch

அடிலெய்டு : பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடிவரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் பிடித்த கேட்ச் அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஷீத் கான் கேட்ச் பிடித்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, அவர் எதையும் சாதித்து காட்டுவார் என்று பெருமிதம் தெரிவித்துள்ளது.

பிபிஎல் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி சார்பில் விளையாடிவரும் ரஷித் கான் இந்த தொடரில் தன்னுடைய சாதனைகள் மூலம் அனைவரது புருவங்களையும் உயர்த்தி வருகிறார். மேலும் வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் இவர் விளையாட உள்ளார்.

முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன்

முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன்

முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். தன்னுடைய பல்வேறு சாதனைகளால் ரசிகர்களை கவர்ந்து வரும் ரஷீத் கான் தற்போது ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாட்டு

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாட்டு

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள ரஷீத் கான், தனது சிறப்பான ஆட்டத்தால் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார்.

கவனத்தை பெற்ற ரஷீத் கான் கேட்ச்

கவனத்தை பெற்ற ரஷீத் கான் கேட்ச்

தற்போது ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் விளையாடி வரும் ரஷீத் கான், தன்னுடைய பேட்டிங், பௌலிங் மட்டுமின்றி பீல்டிங்கிற்காகவும் கவனம் பெற்று வருகிறார்.

ஒரு விக்கெட்டும் அடக்கம்

ஒரு விக்கெட்டும் அடக்கம்

இந்நிலையில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக பந்து வீசிய ரஷீத் கான், 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே அளித்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

ஓடி... ஓடி... கேட்ச் பிடித்த கான்

ஓடி... ஓடி... கேட்ச் பிடித்த கான்

தொடரில் தன்னுடைய பீல்டிங்கையும் சிறப்பாக செய்துவரும் ரஷீத் கான், வலிமையான வீரர் கிறிஸ் லின் 26 ரன்களில் அவுட்டாக காரணமாக இருந்தார். அவரது கேட்ச்சை பிடிக்க ரஷீத் காட்டிய தீவிரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பகிர்வு

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பகிர்வு

ரஷீத் கானின் இந்த கேட்ச் குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதிவிட்ட நிலையில், அதை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்தது.

சன் ரைசர்ஸ் பாராட்டு

சன் ரைசர்ஸ் பாராட்டு

ரஷீத் கானின் இந்த முக்கியமான மற்றும் பரபரப்பான கேட்ச்சை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத், எதையும் செய்வார் ரஷீத் கான் என்றும் திரும்பவும் சொல்கிறோம்... எதையும் செய்வார் ரஷீத் கான் என்றும் தெரிவித்துள்ளது.

3வது வீரர் ரஷீத் கான்

ஆஸ்திரேலியாவின் இந்த பிபிஎல் சீசனில் 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார். முதல் இரண்டு இடங்களை டேனியல் சாம்ஸ் மற்றும் ஹரிஸ் ரவூப் பெற்றுள்ளனர்.

Story first published: Friday, January 17, 2020, 18:17 [IST]
Other articles published on Jan 17, 2020
English summary
BBL 2020 : Rashid Khan impressed Fans with Sensational Catch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+