Rashid Khan: தங்க நிறத்தில்.. ஜொலித்த மாளிகை.. 4 சகோதரர்களுக்கு திருமணம்.. மிரள வைத்த ரஷித் கான்
காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்றது. அவரது திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் வெளிப்புற மற்றும் உட்புறப் பகுதிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மொத்த மண்டபமும் தங்க நிறத்தில் ஜொலி, ஜொலித்தது. மேலும், ஒரே நேரத்தில் ரஷித் கான் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுக்கு ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய கலாச்சாரமான பாஸ்துன் முறைப்படி திருமணம் நடந்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பொதுவாக ஆப்கானிஸ்தான் என்றால் வறுமையான நாடு என்ற ஒரு பிம்பம் உள்ளது. அதை இந்த திருமணம் அடித்து உடைத்து உள்ளது. ரஷித் கான் உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருப்பதுடன், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆணிவேராகவும் இருக்கிறார். அவர் உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக மாறிய பின்னரே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும், வீரர்களும் கவனம் பெற்றனர். அதைத் தொடர்ந்து அந்த அணி பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து இருக்கிறது.

கடந்த 2023 ஒருநாள் போட்டி மற்றும் 2004 டி20 உலக கோப்பை ஆகியவற்றில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு இருந்தது. சமீபத்தில் கூட தென்னாப்பிரிக்கா அணியை ஒருநாள் போட்டியில் வீழ்த்தி இருந்தது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் இந்தியாவுக்கு அடுத்த சிறந்த அணியாக உருவாகி உள்ளது. பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய அணிகளை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது ஆப்கானிஸ்தான்.

இந்த நிலையில், ரஷித் கான் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து இருக்கிறது. ரஷித் கானுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெரிய அளவில் சம்பளம் கிடைக்காது என்றாலும் அவர் ஐபிஎல் மற்றும் பிற நாடுகளின் டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறார்.

அவர் உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருப்பதால் அவர் விளையாடும் தொடர்களில் எல்லாம் பல கோடிகளில் அவருக்கு சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. பல இந்திய வீரர்களை விட அவர் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் தான் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு கிரிக்கெட் உலகில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications