Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்கள் தொடர் சப்போர்ட்... நன்றி சொன்ன ஆப்கான் வீரர்!

ஷார்ஜா : நேற்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் விளையாடிவந்த ஆப்கன் வீரர் ரஷீத் கான், சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினார்.

நேற்றைய போட்டியிலும் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் தொடரிலிருந்து வெளியேறினாலும் ரசிகர்களின் தொடர் சப்போர்ட்டிற்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

சிறப்பான சன்ரைசர்ஸ் அணி

சிறப்பான சன்ரைசர்ஸ் அணி

ஐபிஎல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துவக்கத்தில் சரியாக விளையாடவில்லை என்றாலும் பின்னர், சுதாரித்து சிறப்பான ஆட்டங்களை கொடுத்தனர். அந்த அணியின் நட்சத்திர பௌலர் ரஷீத் கான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆடடங்களை அளித்தார்.

சன்ரைசர்ஸ் அணி தோல்வி

சன்ரைசர்ஸ் அணி தோல்வி

இந்நிலையில் நேற்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. கோப்பையை கைப்பற்றும் என்று ஆருடங்கள் அளிக்கப்பட்ட அந்த அணி இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை.

ரஷீத் கான் டிவீட்

ரஷீத் கான் டிவீட்

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் அணியின் பௌலர் ரஷீத் கான் தனக்கும் அணிக்கும் இந்த சீசன் முழுமையிலும் தொடர்ந்து ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி கூறிய ரஷீத்

நன்றி கூறிய ரஷீத்

தங்களது சிறப்பான மற்றும் மோசமான போட்டிகளின்போது ஆரஞ்ச் ஆர்மி தொடர்ந்து தங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், ரசிகர்களின் தொடர் ஆதரவு தொடர்ந்து போராட ஆதரவாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அடுத்தமுறை விளையாடும்வரையில் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, November 9, 2020, 19:01 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+