For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கொட்டாவி" விட்டவருக்கு எகிறும் கிராக்கி.. "அணியை மீட்க வேற வழியே இல்ல" - பாக்., முன்னாள் வீரர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியை மீட்க இதைவிட்டால் வேறு வழியில்லை என்கிறார் முன்னாள் வீரர் ஒருவர். அப்படி என்ன ஐடியா அது?

Recommended Video

T20 World Cup 2021: India Pakistan ஒரே Groupல்! Super 12ல் சம்பவம் | OneIndia Tamil

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலைமை இப்போது பூமிக்கு அடியின் மையப்பகுதியில் இருக்கிறது எனலாம். அவ்வளவு அதலபாதாளம் சென்றுவிட்டது.

ஜிம்பாப்வே, கென்யா அணிகளை தவிர எந்த அணியுடனும் ஜெயிக்க மாட்டோம் என்று சத்திய பிரமாணம் எடுத்துவிட்டனர்..

 கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

சமீபத்தில் இங்கிலாந்து சென்ற பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. டி20, ஒருநாள் என்று ஒயிட் வாஷ் (மழையால் ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை) ஆகி வந்திருக்கிறது. இதனால், ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என்று அனைத்து தரப்பிலும் இருந்து அணி மீதும், வீரர்கள் மீதும், அவர்களின் செயல்பாடுகள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

 பதில் சொல்லுங்க

பதில் சொல்லுங்க

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் ஒரேயொரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதுவும் சுருக்கமாக நறுக்கென்று. அவர் கேட்கிறார், "ஏன், சர்ஃபரஸ் அகம துவைகேப்டன் பதவியில் இருந்தும், மைக்கே ஆர்த்ரை கோச் பதவியில் இருந்தும் நீக்கினீர்கள்?" என்று. அவ்வளவு தான். இவர்களை இருவரையும் அவசரப்பட்டு நீக்கி பெரும் தவறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

 ரெக்கார்டை பாருங்கள்

ரெக்கார்டை பாருங்கள்

"மிக்கி ஆர்தர் ஏன் நீக்கப்பட்டார்?.. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அணி அவருக்கு கீழ் சிறப்பாக செயல்பட்டது, அணி நன்றாக முன்னேறி வந்தது. ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்க. நீங்கள் அதனை பார்க்க முடியும், ஆனால் அவர் அரசியல் காரணமாகவே நீக்கப்பட்டார்" என்று லத்தீப் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

 பெஞ்ச் பலத்தை கூட

பெஞ்ச் பலத்தை கூட

2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றுக் கொடுத்தவர் சர்ஃபராஸ் அகமது. பாகிஸ்தானை அந்த பட்டத்தை வெல்ல சர்ஃபராஸ் மற்றும் ஆர்தர் முக்கிய காரணமாக இருந்தனர். இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகே, பாகிஸ்தான் நிலைமை படுமோசமானது. இது பாகிஸ்தான் வாரியத்துக்கு பெரும் இழப்பாகும். நான் மிஸ்பா-உல் ஹக்கைக் குறை கூறவில்லை, ஒருவேளை அவர் தலைமை பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அவர் இளமையாகவும் பயிற்சியாளராக அனுபவமற்றவராகவும் இருக்கிறார். இன்று நாம் ஒருநாள் தொடரில் மோசமாக இரண்டாம் தர இங்கிலாந்து அணியிடம் தோற்றிருக்கிறோம், அதாவது இங்கிலாந்தின் பெஞ்ச் பலத்தை வெல்ல எங்கள் கிரிக்கெட் போதுமானதாக இல்லை" என்று தனது வேதனையை கொட்டியிருக்கிறார் (இருக்காதா பின்ன!! என்னா அடி!!)

Story first published: Friday, July 16, 2021, 21:10 [IST]
Other articles published on Jul 16, 2021
English summary
Latif said Pak made mistake removing Sarfaraz - பாகிஸ்தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+