சென்னை : அரசியல், சினிமாவை போல் கிரிக்கெட்டையும் ஃபேக் நியூஸ் என்ற ஆயுதம் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பாரம்பரிய பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாடா இந்த ஃபேக் நியூஸ் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தள்ளப்பட்டு இருக்கிறார்.
லியோ படத்தில் கூறப்பட்ட பிளாஷ்பேக் போலி என்று இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் கூறப்பட்ட நிலையில் தற்போது கிரிக்கெட்டிலும் ஒரு பேக் செய்தி வந்தது.

அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்ற நிலையில் ரஷித் கான் சென்னை ஆடுகளத்தில் கொண்டாடியதாகவும், அப்போது இந்திய தேசிய கொடியை ஏந்தி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியானது. இதனால் கடுப்பான ஐசிசி இந்திய தேசிய கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்று கூறி 35 லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்ததாக சமூக வலைத்தளத்தில் ஃபேக் நியூஸ் தீயாகப் பரவியது.
ஆனால் ரஷித் கான் அப்படி ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபடவே இல்லை. ஐசிசியும் இப்படி ஒரு தண்டனையை வழங்கவே இல்லை. ஆனால் இதில் என்ன கூத்து என்றால் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தியதற்காக ரஷித் கானுக்கு அபராதம் வழங்குவதா என்று கோபப்பட்டு, அந்த அபராதத்தை நானே செலுத்தி விடுகிறேன். மேலும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை ரசித் கானுக்கு வழங்குகிறேன் என்று ரத்தன் டாடா அறிவித்தது போல் whatsapp ல் செய்திகள் வெளியானது.
இது கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவு பரப்பப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள ரத்தன் டாடா, எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் அபராதத்தையும் இல்லை கிரிக்கெட் வீரருக்கு பரிசு தொகையும் நான் அறிவிக்கவே இல்லை. ஐசிசி இடம் நான் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் எனக்கும் கிரிக்கெட்டுக்கும் தொடர்பே கிடையாது. எனவே வாட்ஸ் அப்பில் வரும் ஃபார்வர்ட் பொய் செய்திகளை நம்ப வேண்டாம்.
என்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்திலிருந்து செய்திகள் வந்தால் மட்டுமே நம்புங்கள் என்று ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் பாகிஸ்தான் போட்டிக்கு தேசிய கொடியை எடுத்துச் செல்லக்கூடாது என ஒரு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அதனை சுற்றி தொடர்ந்து பொய் செய்திகள் வெளிவந்த நிலையில் அதனை ரத்தன் டாடா மறுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.