Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

400 விக்கெட்டுகள் சாதனை... இன்னும் 12 விக்கெட்டுகளே பாக்கி... அஸ்வின் அபாரம்!

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து ஆடி வருகிறது.

இந்த போட்டியில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தவித்து வருகிறது. ரவி அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் 400 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்த ரவி அஸ்வினுக்கு இன்னும் 12 விக்கெட்டுகளே மீதமுள்ளது. இந்த தொடரில் அவர் இதை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடத்துவங்கியுள்ளது. இதுவரை 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

அஸ்வின் அபாரம்

அஸ்வின் அபாரம்

இந்த போட்டியில் பௌலிங் செய்த ஸ்பின்னர் ரவி அஸ்வின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் டாம் சிப்ளி மற்றும் டான் லாரன்ஸ், அஸ்வினின் பந்துவீச்சில் அடுத்தடுத்து வீழ்ந்தனர். மேலும் அக்சர் பந்துவீச்சில் கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டையும் கேட்ச் பிடித்து வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்

9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்

கடந்த போட்டியிலும் இவர் இரண்டு இன்னிங்சில் முறையே 3 மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஸ்பின்னராக இரண்டாவது இன்னிங்சின் முதல் பந்தில் முதல் விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்தார் அஸ்வின். இந்நிலையில் போட்டியின் துவக்கத்திலேயே தற்போது 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

12 விக்கெட்டுகள் மீதம்

12 விக்கெட்டுகள் மீதம்

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் ரவி அஸ்வினின் பங்கு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் 400 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்த ரவி அஸ்வினுக்கு இன்னும் 12 விக்கெட்டுகளே பாக்கி உள்ளது. அவர் இந்த சாதனையை இந்த தொடரிலேயே நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, February 14, 2021, 12:51 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+