Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு.. மேலிறங்கிய அஸ்வின்... கீழிறங்கிய கேப்டன்!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் தாக்கம் இந்த தரவரிசை பட்டியலில் அதிகமாக எதிரொலித்து காணப்படுகிறது.

இதில் 5வது இடத்தில் இருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3வது இடத்திற்கும் 4வது இடத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி 5வது இடத்தில் கீழிறங்கியும் காணப்படுகின்றனர். இதேபோல அஸ்வின் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து கூட்டு முயற்சி

இங்கிலாந்து கூட்டு முயற்சி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்து அணி இரு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியுள்ளது. அந்த அணியின் வீரர்கள் கூட்டாக முயற்சி மேற்கொண்டு இந்த சாதனையை புரிந்துள்ளனர்.

டெஸ்ட் தரவரிசை வெளியீடு

டெஸ்ட் தரவரிசை வெளியீடு

இந்நிலையில் தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா -இங்கிலாந்து தொடரின் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் 5வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு தாவியுள்ளார்.

ஒரு இடம் இறக்கம்

ஒரு இடம் இறக்கம்

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 70 ரன்களுக்கு மேல் அடித்திருந்தாலும் கேப்டன் விராட் கோலி 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு இறங்கியுள்ளார். முதல் இரண்டு இடங்களை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் விட்டுத்தராமல் உள்ளனர்.

13வது இடத்தில் பந்த்

13வது இடத்தில் பந்த்

இதனிடையே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் ரவி அஸ்வின் ஒரு இடம் முன்னேறியுள்ளார். அவர் கடந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ள நிலையில் தற்போது பௌலர்கள் வரிசையில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒரே ஸ்பின்னர் அஸ்வின்

ஒரே ஸ்பின்னர் அஸ்வின்

முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஸ்பின்னர் அஸ்வின் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 38 வயதான இங்கிலாந்து பௌலர் ஜேம்ஸ் ஆன்டர்சன் கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் பௌலர்கள் தரவரிசை பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Wednesday, February 10, 2021, 16:44 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+