Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

29வது 5 விக்கெட் சாதனை... அபார அஸ்வின்... இன்னா பௌலிங்... கலக்குறீங்க அஸ்வின்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்ற கடந்த முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் எடுத்து சாதனை புரிந்தார் அஸ்வின்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் தனது 29வது 5 விக்கெட்டுகள் சாதனையை அஸ்வின் செய்துள்ளார். மேலும் 391 விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களை குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்ட நிலையில் அடுத்ததாக ஆடிய இங்கிலாந்து 134 ரன்களுக்கு சுருண்டுள்ளது.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்

5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்

இங்கிலாந்தை சொற்ப ரன்களில் சுருட்டியதற்கு ரவி அஸ்வின் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இவர் இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டாம் சிப்லி, லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 391 விக்கெட்டுகளை அவர் இதுவரை முறியடித்துள்ளார்.

9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்

9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்

கடந்த இங்கலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் தனது 28வது 5 விக்கெட்டுகள் சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்நிலையில் இன்றைய போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளை அவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார்.

29வது முறையாக சாதனை

29வது முறையாக சாதனை

இதன்மூலம் தனது 29வது 5 விக்கெட்டுகள் சாதனையை ரவி அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். மேலும் சொந்த மண்ணில் 266 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இந்த சாதனையை 45 போட்டிகளில் விளையாடி அவர் சாதித்துள்ளார். மேலும் அவர் தன்னடைய 400 விக்கெட்டுகள் சாதனையையும் இந்த தொடரிலேயே மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 14, 2021, 16:52 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+