முதல் இன்னிங்ஸ்ல அதிக விக்கெட்... 2வது இன்னிங்ஸ்ல அதிக ரன்கள்... இங்கிலாந்தை திணறடித்த அஸ்வின்!
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்தியா 473 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி அஸ்வின் தற்போது இரண்டாவது இன்னிங்சில் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 329 ரன்களை இந்தியா குவித்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 286 ரன்களை எடுத்துள்ளது. ரவி அஸ்வின் அதிரடியாக சதத்தை அடித்துள்ளார்.

9 விக்கெட்டுகள்
கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரவி அஸ்வின். அந்த போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்த போதிலும் அஸ்வினின் இந்த சாதனை பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

2வது இன்னிங்சில் சதம்
இந்நிலையில் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இது அவரது 29வது 5 விக்கெட்டுகள் சாதனையாகும். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சதத்தை அடித்து இந்திய அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியுள்ளார்.

ஒரு சிக்ஸ்
முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன்களையும் எடுத்து சாதனை புரிந்துள்ளார் அஸ்வின். 14 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் என அதகளம் செய்துள்ளார். 148 பந்துகளில் 106 ரன்களை அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications