அபாரமான அதிரடி ஆட்டம்... ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்ற அஸ்வின்!
சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றியுடன் முடிந்துள்ளது.
இந்த போட்டியில் ஸ்பின்னர் ரவி அஸ்வின் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த தொடரை 1க்கு 1 என்ற நிலையில் சமன் படுத்தியுள்ளது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் ஸ்பின்னர் ரவி அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் சதத்தை அடித்து அனைவரின் புருவங்களையும் உயர்த்த செய்துள்ளார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications