For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரச்சனைக்கு இவர்தான் காரணகர்த்தா.. மாட்டிய இந்திய அணி.. வெளிவரும் தகவல்கள்.. சிக்கலில் அந்த நபர்!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிக மோசமான தோல்வி முக்கியமான ஒருவரின் பதவி பெரிய அளவில் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பாதாக கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் மோசமாக ஆடிய இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

அதன்பின் டி 20 தொடரில் மீண்டு வந்த இந்திய அணி அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால் தற்போது டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக திணற தொடங்கி உள்ளது.

எப்படி

எப்படி

அதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக மோசமாக ஆடி டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்விவை தழுவி உள்ளது. முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது. முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது.

காரணம்

காரணம்

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான ஆட்டத்தை ஆடி தோல்வியை தழுவி உள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு தோல்விக்கு முழு முதற்காரணமா ஒருவர்தான்..அவர் வேறு யாரும் இல்லை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் என்கிறார்கள்.

 ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரிதான் மிக மோசமாக செயல்படுகிறார். சரியான திட்டங்களை வகுப்பது இல்லை, வீரர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது இல்லை, எந்த முடிவையும் துரிதமாக எடுப்பது இல்லை என்று ரவி சாஸ்திரி மீது ஏகப்பட்ட புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் ரவி சாஸ்திரி பயிற்சியின் போது பெரும்பாலும் மைதானத்திற்கே வருவது இல்லையாம்.

சிக்கல்

சிக்கல்

ஆம் அதிக நேரம் ஓய்வு எடுக்கிறார். வீரர்கள் பயிற்கு மேற்கொள்வதை ரவி சாஸ்திரி மேற்பார்வை இடுவது கூடாது கூட இல்லை. போட்டிக்கு முன்பாக கோச் என்பவர் போட்டிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் ரவி சாஸ்திரி அதை கூட செய்வது இல்லை. அணியின் துணை பயிற்சியாளராக இருக்கும் மற்ற இருவர்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இதெல்லாம் போக ஆட்டத்தின் போதும் இவர் ஆட்டம் மீது கவனம் செலுத்துவது இல்லை. எப்போதும் தூங்கி வழிந்தபடி இருக்கிறார். இந்திய அணி மோசமாக சரியும் போது கூட ரவி சாஸ்திரியிடம் பிளான் பி எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் இவர் மீது பிசிசிஐ செம கடுப்பில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கோபம்

கோபம்

விரைவில் இவரை மாற்ற வேண்டும். இந்திய அணியை இவர் காலி செய்துவிட்டார் என்று புகார்கள் வைக்கப்படுகிறது. ரவி சாஸ்திரிதான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம். இதனால் உடனே ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு வேறு சிறந்த பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது .

Story first published: Sunday, December 20, 2020, 1:45 [IST]
Other articles published on Dec 20, 2020
English summary
Ravi Sasthiri under fire after team Indias historic loss against Australia in test match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+