தேவையில்லைன்னா.. போய்ட்டே இருங்க.. ரவி சாஸ்திரி கறார் பேச்சு!
மும்பை: யோ யோ தேர்வு தேவையில்லை என்று நினைப்போர் அணியில் ஆடுவது குறித்து நினைத்துக்கூட பார்க்க தேவையில்லை. அவர்கள் போய்க் கொண்டே இருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
யோ யோ தகுதி தேர்வு அணிக்கு தேவையான ஒன்று என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: வீரர்கள் சரியான உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே களத்தில் சிறப்பாக செயல்பட முடியும். யாராவது இது தேவையில்லை என கூறினால் அவர்கள் தாராளமாக போகலாம்.

நீங்கள் சரியான உடல் தகுதியுடன் இருந்தால், நீங்கள் அணிக்காக விளையாடலாம். இல்லையெனில் உங்களால் ஆட முடியாது. இதுவே அணி தலைவரின், , தேர்வுக் குழுவினரின் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளின் விருப்பமாகும். வீரர்களும் சிறந்த முறையில் ஒத்துழைக்க வேண்டும்.
இந்திய அணி இங்கிலாந்தில் நீண்ட தொடரில் ஆடவுள்ளது. அதற்கு முன் அயர்லாந்து அணிக்கெதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் ,இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறது. இது இங்கிலாந்து சூழ்நிலையை புரிந்து கொள்ள உதவும்.
இது இந்திய அணிக்கு தாய்நாட்டில் விளையாடுவது போலத்தான். ஆடுகளத்தை திறமையால் வெல்வது நமது முதல் நோக்கம். நாம் இங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. நம்மை பொறுத்தவரை அது நமக்கு நம்நாட்டில் விளையாடுவது போலத்தான் என்றார் அவர்.
சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் ஷமி, ராயுடு மற்றும் சாம்சன் ஆகியோர் யோ யோ தேர்வில் தகுதி பெறாத காரணத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது.
Story first published: Saturday, June 23, 2018, 17:14 [IST]
Other articles published on Jun 23, 2018


Click it and Unblock the Notifications