Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”மாட்டுச் சாணி”.. என்ன இப்படி மடக்குன்னு சொல்லிட்டாரு சாஸ்திரி??

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து நேற்று வதந்திகள் பரவின. அவர் ஒரு பாலிவுட் நடிகையோடு காதலில் இருப்பதாக செய்திகள் வந்தன.

அது குறித்த கேள்விகளுக்கு கடுப்படித்துள்ளார் ரவி சாஸ்திரி. ஒரே வார்த்தையில் அதற்கு பதில் அளித்து தன் கோபத்தை காட்டி இருக்கிறார். அப்படி என்னதான் சொன்னார் என பார்ப்போம்.

Ravi Shasthri anger over Nimrat Kaur dating rumours spreading

மும்பை மிரர் என்ற பத்திரிக்கையில் நேற்று இந்த செய்தி வெளியானது. அதில் ரவி சாஸ்திரி, பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரோடு ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் இரண்டு ஆண்டுகளாக இந்த ரகசியத்தை காத்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

சென்ற ஆண்டு, அவர்கள் இருவரும் கார் அறிமுக விழாவில் ஒன்றாக பங்கு பெற்றார்கள். அதை வைத்துதான் இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இந்த வதந்தியை நேற்றே நிம்ரத் கவுர் ஒரு சூசகமான ட்வீட்டில் மறுத்து இருந்தார். அவர் கோபமடையவில்லை.

மற்ற பத்திரிக்கைகள் இந்த வதந்தி பற்றி ரவி சாஸ்திரியின் பதில் என்ன என அறிய முயன்றுள்ளன. அப்போது அவர் இந்த வதந்திகள் அனைத்தும் "மாட்டு சாணம்" என ஒரே வார்த்தையில் சொல்லி தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரவி சாஸ்திரி.

மீண்டும் மீண்டும், இது பற்றி கேட்ட போது, "நான் இப்படி சொல்கிறேன் என்றால் உங்களுக்கே அது புரிய வேண்டும்" என தன் வெறுப்பை காட்டி இருக்கிறார்.

இந்த வதந்தியை விட அது வெளியான நேரம் தான் முக்கியம். சரியாக இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்து விமர்சனத்தை எதிர்கொண்டு வரும் போது இந்த வதந்தி பரவி உள்ளது.

Story first published: Tuesday, September 4, 2018, 12:52 [IST]
Other articles published on Sep 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+