For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரவி சாஸ்திரி பாலிவுட் நடிகையோடு டேட்டிங்கா?...டெஸ்ட் தொடரை இழந்த நேரத்தில் வரும் செய்தியைப் பாருங்க

மும்பை : ரவி சாஸ்திரி பாலிவுட் நடிகை ஒருவரோடு இரண்டு வருடங்களாக டேட்டிங்கில் இருப்பதாக ஒரு தகவல் மும்பையில் இருந்து வந்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்த இந்த நேரத்தில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் ரவி சாஸ்திரி. அவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்து மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில், நிம்ரத் கவுர் என்கிற பாலிவுட் நடிகையை காதலித்து வருவதாகவும், இருவரும் ரகசியமாக ஊர் சுற்றி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Ravi Shasthri dating bollywood actress Nimrath Kaur for 2 years, according to a media report

எனினும், இரண்டு ஆண்டுகளாக இருவரும் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்து இருந்ததாக மும்பை மிரர் என்ற பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிம்ரத் கவுர் இப்போது வெப்-சீரீஸ்களில் நடித்து வருகிறார்.

ரவி சாஸ்திரி கடந்த 80களில் அம்ரிதா சிங் என்ற பாலிவுட் நடிகையோடு சேர்த்து கிசுகிசுக்கபட்டார். எனினும், அதை இருவரும் பின்னர் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நீண்ட காலம் கழித்து ரவி சாஸ்திரி குறித்து இப்படி ஒரு தகவல் வந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த இந்த நேரத்தில், இந்த செய்தி வெளியானது ஏன் என தெரியவில்லை. ஏற்கனவே, இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த போது ரவி சாஸ்திரி மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.

தொடர்ந்து இந்த டேட்டிங் செய்தி, தொடரின் தோல்விக்கு பின் வெளியாகி உள்ளதால், ரவி சாஸ்திரிக்கு என்ன விதமான எதிர்வினைகள் எழும் என்று பார்க்கலாம்.

Story first published: Monday, September 3, 2018, 18:25 [IST]
Other articles published on Sep 3, 2018
English summary
Ravi Shasthri dating bollywood actress Nimrath Kaur for 2 years, according to a media report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+