Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பச்சையாக பொய் சொன்ன ரவி சாஸ்திரி… ஆதாரத்தோடு கிழித்து தொங்கவிடும் ட்விட்டர்வாசிகள்

Recommended Video

சாஸ்திரியை ஆதாரத்தோடு கிழித்து தொங்கவிடும் ட்விட்டர் வாசிகள்- வீடியோ

லண்டன் : இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் ரவி சாஸ்திரி இந்திய அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை பற்றி பேசாமல், தற்போதுள்ள இந்திய அணி மிகவும் சிறந்த அணி என கூறினார்.

ரவி சாஸ்திரி பத்திரிக்கையாளர் சந்திப்பில், தற்போதுள்ள இந்திய அணி கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம் என கூறியுள்ளார்.

அவர் சொல்லும் மூன்று டெஸ்ட் தொடர்கள் ஒரு வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் இரண்டு இலங்கை தொடர்கள். சிரிப்பை வரவழைக்கும் அவரது நம்பமுடியாத வார்த்தைகளை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள், ட்விட்டரில் ரவி சாஸ்திரியை வறுத்து வருகிறார்கள். அதில் சில பதிவுகளை இங்கே பார்ப்போம்.

கங்குலியின் வெற்றிகள் ஆதாரத்தோடு

கங்குலியின் தலைமையில் 4 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகளை பட்டியல் இட்டுள்ளார் இவர். 2000இல் வங்கதேசத்தோடு 1 வெற்றி, 2001இல் (அப்போதைய வலுவான) ஜிம்பாப்வேயோடு ஒரு வெற்றி, 2002இல் இங்கிலாந்தோடு 1 வெற்றி மற்றும் தொடர் 1-1 என சமன், வெஸ்ட் இண்டீஸ் 1 வெற்றி, 2003-04இல் ஆஸ்திரேலியாவோடு 1 வெற்றி, பாகிஸ்தானோடு 2 வெற்றிகள்

இதற்கு பதில் அளித்துள்ள ஒருவர், இந்தியாவின் பயிற்சியாளர் ஒரு கோமாளி. இந்திய கிரிக்கெட் இன்று இந்த நிலைமையில் இருக்கக் காரணம் கங்குலி தான். சாஸ்திரி சொல்வதெல்லாம் ஒரு பொருட்டல்ல என கூறி இருக்கிறார்.

சாஸ்திரி முழு நேர மாடல்

இவர், "சாஸ்திரி இப்படி பேச காரணம், முன்பு முழு நேரம் கிரிக்கெட்டில் வேலை செய்தார். தற்போது பகுதி நேரமாக கிரிக்கெட்டிலும், முழு நேரமாக மாடலிங்கிலும் வேலை செய்கிறார்" என கிண்டல் செய்துள்ளார்.

அரசியல் செய்து கோச் ஆனார்

இவர் "பயிற்சியாளர் தன்னை காத்துக் கொள்கிறார். ரவி சாஸ்திரி இல்லாமல் அணி நன்றாக செயல்படும். நீங்கள் அரசியல் செய்து பயிற்சியாளராக வந்துள்ளீர்கள். பல நல்ல பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்" என கூறுகிறார்.

இந்திய அணியை அழிக்கும் சாஸ்திரி

இவர், "சாஸ்திரியும், கோலியும், இந்திய கிரிக்கெட்டை அழித்து வருகிறார்கள். ஆதாரம் - பண்டியா டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது தான்" என ஒரே போடாக போட்டுள்ளார்.

சாஸ்திரி பைத்தியக்கார பேச்சு

இவர், "என்னையே நான் வெறுத்தால், சாஸ்திரியின் பேட்டிகளை பார்ப்பேன். அப்போது என்னை விட வாழ்க்கையில் பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள் என நினைத்து ஆறுதலடைவேன்" என நக்கல் அடித்துள்ளார்.

சினிமா டயலாக் சாஸ்திரி

"இந்திய கிரிக்கெட்டின் வருத்தமான விஷயம் "ரவி சாஸ்திரி". ஒவ்வொரு போட்டி முன்பும் பத்திரிக்கை சந்திப்பில் ஒரு சினிமா வசனம் பேசுவதும், பின் செயல்படாமல் போவதும் மோசமாக உள்ளது. முந்தைய அணிகளை பற்றி இவருக்கு என்ன பிரச்சனை?" என கேட்டுள்ளார்.

Story first published: Friday, September 7, 2018, 13:38 [IST]
Other articles published on Sep 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+