சிரிக்காம இருக்கணும்.. 15-20 ஆண்டுகளில் சிறப்பாக ரன் குவித்த இந்தியா..காமெடி பண்ணும் சாஸ்திரி
லண்டன் : இந்திய அணி இங்கிலாந்து தொடரை இழந்து இருக்கும் நிலையில், ரவி சாஸ்திரி தற்போது உள்ள இந்திய அணிதான் கடந்த 15-20 ஆண்டுகளில் சிறந்த அணி என கூறியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 1-3 என தொடரை இழந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த போது கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்திய அணி மூன்றாம் போட்டியில் வென்றது.
அடுத்த நான்காம் போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. தற்போது ரவி சாஸ்திரி, கோலி மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

15-20 ஆண்டுகளில் இல்லாத அளவு
இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரவி சாஸ்திரி, தற்போதுள்ள இந்திய அணி தான் கடந்த 15-20 ஆண்டுகளில் குறைந்த நேரத்தில், வேகமாக ரன் குவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் வெளிநாடுகளில் 9 போட்டிகளில் வென்றுள்ளோம். மூன்று தொடர்களை கைப்பற்றியுள்ளோம் என கூறி இருக்கிறார்.

தவறை மறைக்கும் கோலி, சாஸ்திரி
இவர் இப்படி சொல்லுவது ஆச்சரியமாக உள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி தொடரை இழந்துள்ள நிலையில், கோலி மற்றும் ரவி சாஸ்திரி தவறை ஒப்புக் கொள்ளாமல் வீரர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மட்டுமே வெற்றி
அந்த வகையில் தற்போது ரவி சாஸ்திரி இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி உள்ள நிலையில், அவர்களை பற்றி பெருமையாக சொல்வது போல இந்திய அணி விரைவாக ரன் எடுத்துள்ளது என கூறியுள்ளார். மேலும், இவர் சொல்லும் மூன்று வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் வெற்றி என்பது ஒரு முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரண்டு முறை இலங்கை அணியிடம் கிடைத்தது.

மொயீன் அலி, அஸ்வின் வித்தியாசம்
அதே போல மொயீன் அலி, அஸ்வின் குறித்து பேசுகையில், மொயீன் அலி ஆடுகளத்தில் இருந்த சொரசொரப்பான பகுதியில் அதிகம் பந்து வீசினார். அஸ்வின் அதை அதிகம் பயன்படுத்தவில்லை என கூறினார்.


Click it and Unblock the Notifications