என்ன இப்படி பண்ணிட்டாரு.. இன்று காலையிலேயே வேகவேகமாக ஜோ ரூட்டிடம் சென்ற சாஸ்திரி.. ப்பா என்ன மனுசன்
சென்னை: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று காலை சந்திப்பு நடத்தியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி 570 ரன்களை கடந்து ஆடி வருகிறது.
அதிலும் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஸ்டோக்ஸ், சிப்லி, பர்ன்ஸ், பட்லர் என்று எல்லோரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இங்கிலாந்து கேப்டன் ரூட் இரண்டு நாட்களாக ஆடிய விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

எப்படி
இரண்டு நாட்கள் பேட்டிங் செய்த ரூட் மிகவும் நேர்த்தியாக அடி 218 ரன்கள் எடுத்தார். 377 பந்துகளை பிடித்த ரூட் 218 ரன்கள் எடுத்தார். 19 பவுண்டரியும், 2 சிக்ஸும் இவர் அடித்தார். இவரின் ஆட்டம் இரண்டு நாட்களும் சிறப்பாக இருந்தது.

சிறப்பான பேட்டிங்
முக்கியமாக இவர் ஸ்பின் பவுலர்களை எதிர் கொண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஸ்வீப் ஷாட் , ஸ்விட்ச் ஹிட் என்று இவர் ஆடிய விதம் பலரையும் கவர்ந்தது. இந்திய அணி வீரர்களே சல்யூட் அடிக்கும் அளவிற்கு இவரின் ஆட்டம் அசத்தலாக அமைந்து இருந்தது.

பாராட்டு
நேற்று ஜோ ரூட் அவுட்டாகி சென்ற போதே கேப்டன் கோலி ரூட்டின் தோளில் தட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் ஜோ ரூட்டுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று காலை சந்திப்பு நடத்தியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இன்று காலை ரூட் பயிற்சி செய்யும் போது சாஸ்திரி நேரடியாக சென்று அவரை சந்தித்துள்ளார்.

சந்திப்பு
ரூட்டின் இரட்டை சதம் குறித்து அவரிடம் பேசி, அவரின் பேட்டிங்கை சாஸ்திரி பாராட்டி உள்ளார். இது ரூட்டின் 100வது டெஸ்ட் என்பதால் சாஸ்திரி இதை பற்றி நீண்ட நேரம் பேசியுள்ளார். சாஸ்திரியின் இந்த செயல் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

நல்ல மனிதர்
ப்பா என்ன மனுஷன் இவர்.. ஒரு அணியின் பயிற்சியாளர் இன்னொரு அணியின் வீரர் நன்றாக ஆடியதும் நேரடியாக சென்று பாராட்டி உள்ளார். பயிற்சியாளராக சாஸ்திரி இப்படி செய்தது பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ரசிகர்களையும் இது கவர்ந்து உள்ளது.


Click it and Unblock the Notifications