Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் ராகுல்.. ரவி சாஸ்த்ரி சொன்ன யோசனை.. சரி வருமா?

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடிய காரணத்தால் துணை கேப்டன் பதவியை இழந்த கே எல் ராகுல் மூன்றாவது டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதன் மூலம் கேஎல் ராகுல் கடும் நெருக்கடியில் இருந்தார். ஒரு நாள் போட்டியில் தன்னுடைய பார்மை நிரூபிக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக இந்திய அணில் இருந்து கே எல் ராகு நீக்கப்படுவார்
என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே எல் ராகுல் அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி தொடர்

கடைசி தொடர்

இந்திய அணி 39 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இருந்த போது ராகுல் விளையாடிய ஆட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ராகுல் குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பு இந்திய அணி கடைசியாக விளையாடும் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் தான்.

யோசனை

யோசனை

இடையில் இரண்டு மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்தது. கே எல் ராகுலை டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம் என பலரும் யோசனை கூறி வருகிறார்கள்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

அதற்கு தகுந்தார் போல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். இதன் மூலம் விக்கெட் கீப்பராக தன்னுடைய கம்பேக்கை ராகுல் கொடுப்பார் என நம்புகிறேன். கேஎல் ராகுலை நிச்சயமாக இங்கிலாந்தில் விக்கெட் கீப்பராக நீங்கள் பயன்படுத்தலாம். நடுவரிசையில் ராகுல் இடம் பெற்றால் உங்களுடைய பேட்டிங்கும் பலமாக மாறிவிடும். இங்கிலாந்து ஆடுகளங்கள் ஜூன் மாதத்தில் சுழற் பந்துவீழ்ச்சிக்கு சாதகமாக இருக்காது.

பாராட்டு

பாராட்டு

சுழற் பந்துவீச்சை பிடிப்பதுதான் விக்கெட் கீப்பருக்கு சவாலான காரியம். ஆனால் ராகுல் தம்மால் விக்கெட் கீப்பிங் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார். இதனால் ராகுலுக்கு வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும் என ரவி சாஸ்திரி கூறினார். ரவி சாஸ்திரியின் கருத்தை ஆதரித்து பேசிய சுனில் கவாஸ்கர், அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கேய்கள் ராகுல் காப்பாற்றி விட்டதாக பாராட்டியுள்ளார்.

Story first published: Saturday, March 18, 2023, 20:57 [IST]
Other articles published on Mar 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+