Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க 6 பேருக்கும் இண்டர்வியூ..! கடைசியில ரவி சாஸ்திரி தான் கோச்..? கோலி, பிசிசிஐ பிளான் இதுதான்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் இண்டர்வியூவுக்கு ரவி சாஸ்திரி உள்பட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பையில், இந்தியா அரையிறுதியுடன் வெளியேறியது. இதையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை 45 நாட்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக கபில் தேவ் தலைமையில் 3 பேர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. அந்த குழு, அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது.

2,000 விண்ணப்பங்கள்

2,000 விண்ணப்பங்கள்

கோச் உள்ளிட்ட பல பதவிகளுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. எத்தனை பேர் விண்ணப்பித்தாலும் இந்தியர் அல்லாதவருக்கு கோச் பதவி அளிக்கப்படாது என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்தன.

இறுதிப்பட்டியல் வெளியீடு

இறுதிப்பட்டியல் வெளியீடு

தகுதியின் அடிப்படையில் 6 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை அந்த குழு வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் ராபின் சிங் மற்றும் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் ஆகிய 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

3 பேர் வெளிநாட்டினர்

3 பேர் வெளிநாட்டினர்

மேலும், நியூசிலாந்து அணி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், இலங்கை முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி ஆகியோர் உள்ளனர். ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் பில் சிம்மன்சும் பட்டியலில் உள்ளளார். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டினர்.

6 பேருக்கு அழைப்பு

6 பேருக்கு அழைப்பு

இந்த வார இறுதியில் கபில் தேவ் தலைமையில் மும்பையில் நடைபெறும் நேர் காணலில் 6 பேரும் பங்கேற்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் உள்ள ரவி சாஸ்திரி காணொலி காட்சியின் மூலம் இண்டர்வியூவில் பங்கேற்கிறார். அதன் முடிவில் புதிய பயிற்சியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

அன்றே முடிவு

அன்றே முடிவு

அனேகமாக அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட்டு விடும். அப்படி இல்லாத பட்சத்தில்அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் அறிவிப்பு வெளியாகும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக, ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நீடிக்கக் கூடும் என்று கேப்டன் கோலி கூறியதால், அவருக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, August 13, 2019, 10:22 [IST]
Other articles published on Aug 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+