Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்போ ரோகித், கோலி கிடையாதா? இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றம்.. ரவி சாஸ்த்ரி, கவாஸ்கர் தகவல்

அடிலெய்ட் : டி20 உலக கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதனை அடுத்து இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக ரவி சாஸ்திரி , கவாஸ்கர் ஆகியோர் கூறியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் படுதோல்வியை தழுவியது.இந்திய அணியின் செயல்பாடு ரசிகர்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது.

புதிய அணி

புதிய அணி

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, இந்திய அணியின் செயல்பாடு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இங்கிலாந்திடம் சண்டையிடாமல் இந்திய அணி சரண்டர் ஆகி விட்டதாக ரவி சாஸ்திரி சாடியுள்ளார். அனைத்திலும் இந்திய அணியை விட இங்கிலாந்து பல மடங்கு சிறப்பாக செயல்பட்டதாக கூறிய ரவி சாஸ்திரி டி20 கிரிக்கெட்டில் புதிய இந்திய அணி தேர்வு செய்ய பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் புதிய அணியை உருவாக்க பிசிசிஐ இப்போது இருந்து திட்டத்தை தயார் படுத்த வேண்டும் எனும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய கவாஸ்கர் வரும் காலங்களில் டி20 கிரிக்கெட்டில் சீனியர் வீரர்கள் பலர் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

ஓய்வு பெறுவார்கள்

ஓய்வு பெறுவார்கள்

ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் பல சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாட வேண்டுமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 30 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள் இனி அணியில் தொடர வேண்டுமா என்பதை அவர்களை யோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் கவாஸ்கர் கனத்துள்ளார்.

டிராவிட் சொல்வது என்ன?

டிராவிட் சொல்வது என்ன?

இதே கேள்வியை ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது பதில் அளித்த அவர் சீனியர் வீரர்கள் அடுத்த உலக கோப்பையில் விளையாடுவது குறித்து இப்போது பதில் சொல்ல தேவையில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.அது பற்றி இப்போது முடிவு எடுக்க எந்த அவசியமும் இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. தேர்வு குழு தலைவர் கேப்டன் சர்மா ஏற்கனவே புதிய டி20 அணியை உருவாக்கும் பணியில் வீசி சேய் இருப்பதாக கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Story first published: Friday, November 11, 2022, 10:54 [IST]
Other articles published on Nov 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+