Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழைய பன்னீர்செல்வமாக திரும்பிய ரவி சாஸ்த்ரி.. இனி கலக்கல் தான்..!!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்த்ரி, 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3830 ரன்கள் சேர்த்தார். ஒருநாள் போட்டிகளில் 3108 ரன்கள் எடுத்தார்.

ரவி சாஸ்த்ரி இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராகவும், தலைமை பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.

ரவி சாஸ்த்ரி இந்திய அணியை வழிநடத்திய போது, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ஆகிய மண்ணில் வெற்றி பெற்றது.

ஆனால் ரவி சாஸ்த்ரி என்று கூறினாலே அவரது உயரமும், அவரது காந்த குரலும் தான் நினைவுக்கு வரும், ரவி சாஸ்த்ரி உலகின் தலைச் சிறந்த வர்ணனையாளராக வலம் வந்தார். 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த சிக்சர் ஆகட்டும், 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்சர் ஆகட்டும்,

Ravi shastri back to star sports as commentator

இதனை நினைக்கும் போது எல்லாம் கூடவே நமக்கு ரவி சாஸ்த்ரியின் குரல் சேர்ந்து தான் வரும் அந்த அளவுக்கு தனது குரல் மூலம் ரசிகர்களை கட்டி வைத்தவர் ரவி சாஸ்த்ரி, ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் ரவி சாஸ்த்ரியின் கிரிக்கெட் வர்ணணையை அவரது ரசிகர்கள் மிஸ் செய்தனர்.

தற்போது அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்ததன் மூலம் மீண்டும் ரவி சாஸ்த்ரி கிரிக்கெட் வர்ணனையாளராக திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரவி சாஸ்த்ரியை வைத்து ஸ்டார் நிறுவனம் விளம்பரம் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் ரவி சாத்ரி எதையோ சமைப்பது போன்ற புரமோ ரிலீஸ் ஆனது.

Story first published: Tuesday, December 21, 2021, 19:26 [IST]
Other articles published on Dec 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+