Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி நிரந்தர கேப்டனாகிறாரா ஹர்திக் பாண்ட்யா.. ரவிச்சாஸ்திரி கூறிய தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!

மும்பை: இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாளை முதல் டி20 தொடர் தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் இந்த தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி மாற்றம்

இந்திய அணி மாற்றம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக சொதப்பியதை அடுத்து இந்திய அணியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். குறிப்பாக தனித்தனியாக கேப்டன்கள் வேண்டும் என பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. இப்படிபட்ட சூழலில் தான் ஹர்திக் பாண்ட்யாவிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரவி சாஸ்திரி கருத்து

ரவி சாஸ்திரி கருத்து

இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், டி20 கிரிக்கெட்டில் மட்டும் புதிய கேப்டன் இருப்பது தவறவில்லை. ஏனென்றால் ஒரு வீரர் இங்கு நிறைய கிரிக்கெட் ஆட வேண்டியுள்ளது. ஒருவரே மூன்று வடிவ கிரிக்கெட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டியது கடினமான ஒன்றாகும். ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை பார்த்து வருகிறார், இதனால் ஹர்திக்கை டி20 கேப்டனாக்குவது தவறில்லை.

ஓய்வு பெறுவார்களா?

ஓய்வு பெறுவார்களா?

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என வலுத்து வரும் கோரிக்கை குறித்தும் ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், அதுபோன்ற முக்கியமான முடிவுகளை உடனே எடுக்க முடியாது. 2024 டி20 உலகக்கோப்பை குறித்து திட்டமிட வேண்டும். அடுத்த வருடம் அது நடக்கும் என நினைக்கிறேன். அதுவரை ரோகித் சர்மா தான் அனைத்து வடிவ அணிக்கும் கேப்டனாக இருப்பார் எனக்கூறியுள்ளார்.

இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே அடுத்தாண்டு ஜனவரி மாதம் கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. இதில் இருந்தே ஹர்திக் பாண்ட்யா நிரந்தர டி20 கேப்டனாக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் தற்போது நியூசிலாந்து தொடரில் பரிசோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Thursday, November 17, 2022, 20:04 [IST]
Other articles published on Nov 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+