Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு பெரிய ஆப்பை வைக்கும் ரவி சாஸ்த்ரி.. குழம்பிய குட்டையை மீண்டும் குழப்பும் யோசனை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் யார் பிளேயிங் லெவனின் இருக்கிறார் என்பதை இன்னும் அணி நிர்வாகம் முடிவு செய்யவில்லை. ஆனால் உலக கோப்பை இன்னும் 50 நாட்களில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரிலும் முடிவில் தான் உலகக்கோப்பை அணி எவ்வாறு இருக்கும் என்று ஒரு ஐடியாவை ரசிகர்களுக்கு தோன்றும்.

Ravi shastri bizarre advice to play kohli at no 4 and rohit at no 3

இந்த நிலையில் ரவி சாஸ்திரி கொடுத்துள்ள ஒரு யோசனை விராட் கோலிக்கு ஆப்பு வைக்கும் வகையில் இருக்கிறது. ஏற்கனவே அணியில் யாரை நடு வரிசையில் பயன்படுத்துவது என்ற குழப்பம் உள்ளது. தற்போது உள்ள இந்திய அணியில் முதல் மூன்று வீரர்களின் இடம்தான் தேர்வாகி இருக்கிறது.இந்த நிலையில் ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் ரோகித் சர்மாவுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது.அவர் நல்ல கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.

அவரால் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்திலும் இறங்க முடியும். முதலிடத்திலும் இறங்க முடியும். இதேபோன்று விராட் கோலி மூன்றாவது இடத்தில் மட்டும் தான் இறங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அணிக்கு தேவைப்பட்டால் அவர் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் கூட களமிறங்க வேண்டும்.

Ravi shastri bizarre advice to play kohli at no 4 and rohit at no 3

இந்த வீரர் இந்த பேட்டிங் வரிசையில் தான் விளையாடுவார் என்ற எந்த உத்தரவாதமும் உங்களுக்கு கொடுக்கப்படவில்லை. அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதில் தான் நீங்கள் செயல்பட வேண்டும். உலகக்கோப்பை போன்ற தொடரில் முதல் இரண்டு விக்கெட் விழுந்து விட்டால் விராட் கோலி போன்ற ஒரு வீரர் நடு வரிசையில் களமிறங்கி விளையாடுவது அவசியம்.

நான் பயிற்சியாளராக இருந்தபோது இதைப்பற்றி வீரர்களிடம் நிறைய பேசி இருக்கிறேன் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ரவி சாஸ்திரியின் இந்த பேட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அணியில் குழப்பமான சூழல் நிலவும் நிலையில் ரவி சாஸ்திரி புதிய குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். விராட் கோலியை நான்காம் இடத்தில் இறங்க சொல்லும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருக்கும்போது இதைப்போல் எத்தனை தவறான முடிவுகளை எடுத்திருப்பார் என்றும் பலர் சாடி இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, August 16, 2023, 18:22 [IST]
Other articles published on Aug 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+