Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகமது ஷமியின் திடீர் ஓய்வு முடிவு .. உள்ளே புகுந்த ரவி சாஸ்திரி.. பரபர நிமிடங்களில் நடந்தது என்ன?

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்கள் மட்டும் காரணம் அல்ல. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றச்சாட்டின. இந்த நிலையில் முதலில் ஆஸ்திரேலியா அணியின் இரண்டு தொடக்க வீரர்களையும் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் தான் வீழ்த்தினார்கள்.

இந்த நிலையில் முகமது ஷமி, இரண்டாவது இன்னிங்ஸிலும் 13 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

இந்த நிலையில் முகமது ஷமி ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பரத் அருண் வெளியிட்டுள்ள தகவலின் படி முகமது ஷமி தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அப்போது உடல் தகுதியிலும் தோல்வியை தழுவியதால் முஹமது ஷமி கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற முடிவெடுத்ததாகவும் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

மனதளவில் பாதிப்பு

மனதளவில் பாதிப்பு

முகமது ஷமி என்னிடம் வந்து பேசிய உடனே அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியிடம் முகமது ஷமியை அழைத்துச் சென்று விபரத்தை கூறினேன். அதற்கு முகமது ஷமியிடம் சில ஆலோசனைகளை ரவி சாஸ்திரி கூறினார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது. இது 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு முன்பு நடைபெற்றது. முகமது ஷமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.தாம் கோபத்தில் இருப்பதால் இனி கிரிக்கெட்டில் என்னால் விளையாட முடியாது என அவர் கூறினார்.

ரவி சாஸ்த்ரி அட்வைஸ்

ரவி சாஸ்த்ரி அட்வைஸ்

இதை அடுத்து ரவி சாஸ்திரி அவரிடம் கிரிக்கெட் விளையாட வில்லை என்றால் நீ என்ன செய்யப் போகிறாய் என கேட்டார். உனக்கு பந்தை கொடுத்தால் என்ன செய்ய தெரியும் என்று அனைவருக்குமே தெரியும். நீ இப்போது கோபமாக இருக்கிறது மிகவும் நல்லது. உன் வாழ்க்கையில் இது தான் உனக்கு நடந்த பெரிய நல்ல விஷயம். தற்போது உன் கையில் பந்து இருக்கிறது. உனது உடல் தகுதி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

கோபத்தை மாற்று

கோபத்தை மாற்று

உனக்கு இருக்கும் கோபத்தை நீ வெளி கொண்டு வா. உனது கோபத்தை உனது உடலில் நீ காட்டு. நாங்கள் உன்னை நேரடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்ப உள்ளோம். அங்கு நான்கு வாரம் தங்கி கடுமையாக பயிற்சியை மேற்கொண்டு உனது கோபத்தை வெளி கொண்டு வா. இந்த நான்கு வாரமும் நீ வீட்டுக்கு போக கூடாது. என் சி ஏ தான் உனது வீடாக இருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.

வாழ்க்கையே மாற்றியது

வாழ்க்கையே மாற்றியது

அப்போது ஷமி வீட்டில் பிரச்சனை இருந்ததால் அவர் அங்கு போகாமல் பெங்களூருவில் தங்கி பயிற்சி எடுத்தது அவருக்கு பெரும் நன்மையாக அமைந்தது. ரவி சாஸ்திரியின் பேச்சைக் கேட்டு ஷமி கடும் பயிற்சி மேற்கொண்டு தனது உடல் தகுதியை சிறப்பாக எட்டினார்.இது குறித்து ரவி சாஸ்திரியிடம் ஷமி பேசிய போது, நீங்கள் சொன்ன அறிவுரை எனக்கு பயனுள்ளதாக அமைந்தது. என்னால் முடிந்த அளவுக்கு நான் ஓடினேன். ஐந்து வாரம் பயிற்சி எடுத்தால் நம் உடல் எந்த அளவுக்கு முன்னேறும் என்பதை நான் தெரிந்து கொண்டேன் என்று ஷமி எங்களிடம் கூறினார்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து தொடரில் ஷமி 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலி பேட்டிங்கில் 593-ரன்கள் அடித்தார்.இந்த தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவினாலும், ஷமியின் வாழ்க்கையை இந்த போட்டி முற்றிலும் ஆக மாற்றியது. கிரிக்கெட் விட்டு விலகப் போகிறேன் என்ற ஷமி அதன் பிறகு 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 14, 2023, 17:29 [IST]
Other articles published on Feb 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+