Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 கோடி சம்பளம் போனதால் கங்குலியை மீண்டும் வம்பிழுக்கும் ரவி சாஸ்த்ரி..!!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்த்ரி கடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் அந்த பதவியிலிருந்து விலகினார்.

ரவி சாஸ்த்ரி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரது தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வென்றது.

இதனால் அவருக்கு பி.சி.சி.ஐ. ஆண்டுதோறும் 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியது. இந்த நிலையில் அவர் வேலையை ராஜினாமா செய்ததால் மீண்டும் சீனியர்களை வம்பிழுக்க தொடங்கிவிட்டார்.

நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு

ரவி சாஸ்த்ரியின் ஜூனியர் தான் கங்குலி, சச்சின் போன்ற வீரர்கள். ரவி சாஸ்த்ரியுடன் நல்ல நட்பிலேயே அனைவரும் இருந்தனர். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு கங்குலி, சச்சின், லட்சுமணன் அடங்கிய குழுவிடம் தரப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ரவி சாஸ்த்ரி ஜூனியர்கள் எப்படி என்னை தேர்ந்து எடுக்க முடியம் என்று கூறி, சுற்றுலா தளத்திற்கு சென்று அங்கிருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

கோபம்

கோபம்

இதனால் கோபமடைந்த கங்குலி, ரவி சாஸ்த்ரி தங்களை அவமதித்துவிட்டதாக கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும் பயிற்சியாளர் பொறுப்பு கும்ப்ளேவிடம் தரப்பட்டது. இந்த நிகழ்வில் இருந்து தான் கங்குலிக்கும், ரவி சாஸ்த்ரிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. யாரும் எதிர்பாராத வகையில் பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி வந்ததும், ரவி சாஸ்த்ரிக்கு செக் வைக்க தொடங்கினார்

விமர்சனம்

விமர்சனம்

ஐ.சி.சி. உலகக்கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ந்து ரவி சாஸ்த்ரி தவறவிட்டதால், அவரே தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தான் பேட்டி ஒன்றில் பேசிய ரவி சாஸ்த்ரி , கடந்த தலைமுறையை விட இந்த தலைமுறை வீரர்கள் தான் சிறந்தவர்கள், பயம் அறியாத வீரர்களாக இருப்பதாக கூறியுள்ளார்.இது மறைமுகமாக கங்குலி, சச்சின், டிராவிட்டை விமர்சிப்பது போல் உள்ளதாக அமைந்துள்ளது.

Recommended Video

Ganguly on Rohit replacing Kohli as ODI skipper | OneIndia Tamil
ஐ.பி.எல்.

ஐ.பி.எல்.

மேலும் ரிஷப் பண்ட், சுப்மான் கில், பும்ரா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகவும், இதற்கு ஐ.பி.எல். தான் காரணம் என்று தெரிவித்தார். கடந்த தலைமுறையை விட இந்த தலைமுறை அனுபவசாளியாக இருப்பதாகவும் விமர்சனம் செய்தார். தாம் ரஞ்சி கோப்பையில் விளையாடும் போது பந்துவீச்சாளர்கள் 120 கி.மீ வேகத்தில் தான் வீசுவார்கள் என்றும் ஆனால் தற்போது நிலை அப்படி அல்ல என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, December 10, 2021, 11:04 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+