Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 மாதம் போதாதோ??.. ராகுல் டிராவிட் பணி செய்யாமல் இருக்கிறாரா?.. ரவி சாஸ்திரி நேரடி தாக்கு!

மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான தோல்வியுடன் வெளியேறிய இந்திய அணி, அங்கிருந்து நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி நாளை ( நவம்பர் 18) வெல்லிங்டனில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து டி20 தொடர்

நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி உள்ளிட்ட பலருக்கும் இந்த தொடரில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படவுள்ளார். இதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஓய்வெடுத்துள்ளதால் அவருக்கு பதிலாக வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் பயிற்சியாளராக சென்றுள்ளார்.

 ரவி சாஸ்திரி அதிருப்தி

ரவி சாஸ்திரி அதிருப்தி

இந்நிலையில் இதற்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பயிற்சியாளர்கள் ஓய்வெடுப்பதிலால் பயன் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. ராகுல் டிராவிட் எப்போதும் வீரர்களுடன் நேரத்தை செலவிட்டு தான் ஆக வேண்டும். அணியில் இருந்து வீரர்களையும், அணி திட்டங்களையும் வகைப்படுத்தினால் தான் சரியான வழியில் செல்ல முடியும்.

மூன்று மாதம் போதாதா?

மூன்று மாதம் போதாதா?

ஐபிஎல் தொடரின் போது 2 முதல் 3 மாதங்கள் வரை இந்திய அணி பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு கிடைக்கிறது. ஒரு பயிற்சியாளராக அது போதும். மற்ற சமயங்களில் கடமையை செய்தே தீர வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

அடுத்த உலகக்கோப்பை திட்டம்

அடுத்த உலகக்கோப்பை திட்டம்

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்காக இனி இங்கிலாந்தின் திட்டங்களை இந்திய அணி பின்பற்ற வேண்டும். அதாவது இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து வீரர்களின் பொறுப்புகளை பிரிக்க வேண்டும். அதற்கு நிறைய இளம் வீரர்கள் தயாராக உள்ளனர். சரியாக கண்டறிவது மட்டுமே தற்போது பிரச்சினையாக இருக்கிறது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

Story first published: Thursday, November 17, 2022, 20:18 [IST]
Other articles published on Nov 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+