அந்த ஒரேயொரு புகைப்படம்..! ஏன் வெளியிட்டீங்க ரவி சாஸ்திரி..? இப்ப எவ்வளவு அசிங்கம் பாருங்க..!
Recommended Video
ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் முடிந்துள்ள நிலையில், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஓய்வை கொண்டாடியதை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 4 நாட்களில் இந்திய அணி வெற்றி பெற்றதால் ஒருநாள் அவர்களுக்கு விடுமுறை கிடைத்தது.
இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தனர் இந்திய வீரர்களும், பயிற்சியாளர்கள் குழுவினர். ஆன்டிகுவா நகரிலுள்ள கொக்கே பே எனும் சுற்றுலா தளத்திற்கு சென்று ஓய்வை அழகாக கொண்டாடினர்.

புகைப்படம் ரிலீஸ்
இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்ட ரவிசாஸ்திரி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜூஸ் குடிக்கும் நேரம்
வெயில் வெயில் வெயில். இது ஜூஸ் அருந்தும் நேரம். கோகோ பே பாறைகள் நிறைந்து அழகாக இருக்கிறதுது. ஆன்டிகுவா என்று பதிவிட்டார். சாஸ்திரியின் புகைப்படத்தை உடனே நெட்டிசன்கள் கிண்டல் செய்தும், கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர்.
கேலி
காரணம் யாதெனில் மது பிரியரான ரவிசாஸ்திரி குடிப்பதற்காக அங்கு சென்று உள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்து அவர் படுத்து விடுவார் என்று கிண்டல் செய்தனர். ஒரு வாசகரோ, மிக பெரிய கண்ணாடி கோப்பையில் மது குடிப்பது போன்ற புகைப்படத்தை உலவ விட்டுள்ளார்.

போதை நபர்
மேலும் சிலர் உங்களது உடைக்கும், உடம்பிற்கும் சம்பந்தமே இல்லை மாற்றிக் கொள்ளுங்கள். பலர் அவர் மதுபானங்கள் மற்றும் சிகரெட் போன்றவற்றுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். ஒரு ரசிகர் போதையில் தள்ளாடி விடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மறந்துவிடாதீர்கள்
மற்றொரு ரசிகரின் கிண்டல் மாஸாக இருக்கிறது. உங்கள் உடல்தகுதியையும், வயிறையும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இந்திய கோச் என்பதை மறந்து விடாதீர்கள் என்று அவரை கேலி செய்துள்ளார். உங்க சிறந்த ஆடைகளை அணிய பழகிக் கொள்ளுங்கள் என்றார். இணையத்தில் ரவி சாஸ்திரியும், அவரை பற்றிய கிண்டல்களும் தான் இப்போது வைரல்.


Click it and Unblock the Notifications