“இந்திய அணியை பார்த்தால் வேதனையாக இருக்கு”.. டி20 உலகக்கோப்பையில் பின்னடைவு?.. ரவிசாஸ்திரி கவலை!
மும்பை: இந்திய அணியை நினைத்தால் மிகவும் மன வேதனையாக இருப்பதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
அக்டோபர் 16ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இன்னும் 2 நாட்களில் தொடர் தொடங்கவுள்ள சூழலில் இந்திய அணியின் பந்துவீச்சு மட்டும் இன்னும் சரியாகாமல் உள்ளது.

டி20 உலகக்கோப்பை
ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறிய தாக்கம் இன்னும் இந்திய அணியில் எதிரொலித்து வருகிறது. புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் கூட்டணி டெத் ஓவர்களில் இன்னும் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். பும்ராவுக்கு மாற்று வீரரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரவிசாஸ்திரி வேதனை
இந்நிலையில் இந்திய அணியின் நிலைமை வேதனை தருவதாக ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு பயிற்சியாளராக முக்கிய வீரர்களை இழந்தது கவலையளிக்கிறது. இங்கிலாந்து, நியூசிலாந்தில் சிறப்பாக செயல்படும் புவனேஷ்வர்குமார் காயத்தால் பாதிக்கப்பட்டார். அதே போன்று தற்போது டி20 உலகக்கோப்பையில் தீபக் சஹார் மீண்டும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ-க்கு கோரிக்கை
கடந்த டி20 உலகக்கோப்பையில் இருந்து பும்ரா இதுவரை வெறும் 5 டி20ல் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால் எப்படி காயமடைந்தார். தற்போதைய காலத்தில் அதிகப்படியான போட்டிகள் இருப்பதால் வீரர்களின் பணிச்சுமையை சரியாக கையாள வேண்டும். ஒரு வீரர் இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்றால் ஐபிஎல்-ல் சில போட்டிகளில் ஓய்வு தரப்பட வேண்டும். இதற்காக பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை
பிசிசிஐ அதிகாரிகள், ஐபிஎல் உரிமையாளர்களுடன் இதுகுறித்து பேச வேண்டும். எந்தெந்த வீரர்களுக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து சரியாக ஓய்வு தரப்பட வேண்டும். இல்லையெனில் தேசத்திற்காக விளையாடும் போது பின்னடைவுகள் ஏற்படுகின்றன என ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications