Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னை பதவியை விட்டு துரத்த பலர் காத்திருந்தனர்”-ரவி சாஸ்த்ரி ஓபன் டாக்..!!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்த்ரி கடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் அந்த பதவியிலிருந்து விலகினார்.

ரவி சாஸ்த்ரி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரது தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வென்றது.

இருப்பினும் ரவி சாஸ்த்ரியின் வழிகாட்டுதலில் இந்திய அணி மூன்று ஐ.சி.சி. தொடர்களை தோற்றுள்ளது. இதனிடையே தம்மை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து துரத்த சிலர் காத்து இருந்ததாக கூறியுள்ளார். அவரது பேட்டி பின்வருமாறு..

பயிற்சியாளர் பதவி

பயிற்சியாளர் பதவி

2007ஆம் ஆண்டே இந்திய அணியின் பயிற்சியாளராக எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது அது நடக்கவில்லை. மீண்டும் 2014ஆம் ஆண்டு என்.ஸ்ரீனிவாசன் தான் என்னை இந்திய அணியை வழிநடத்தும் படி அழைத்தார். அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஓப்பந்தத்தில் இருந்தேன். அதனை ரத்து செய்துவிட்டு இந்திய அணியின் இயக்குனராக பதவி வகித்தேன். அப்போது கோலியை அடுத்த கேப்டனாக இருக்க தகுதியான நபர் என்று முடிவு எடுத்தேன்

பாராட்டு

பாராட்டு

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்கோரஷமாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அதிரடியாக விளையாடியது. விராட் கோலி மட்டும் 4 சதத்தை அடித்து இருந்தார். அந்த தொடரை 2க்கு0 என்ற கணக்கில் இழந்தாலும் , ஆஸ்திரேலிய அணி ஜாம்பவான் ஆலன் பார்டர் எந்த அணியும் ஆஸ்திரேலியாவுக்கு இப்படி நெருக்கடி அளித்ததில்லை என்று கூறி பாராட்டினார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

சரிவிலிருந்த இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்டு வந்தேன். நான் விதை போட்டேன் அதற்காக நான் அறுவடை செய்ய தொடங்குவதற்கு முன் என்னை காரணமே இல்லாமல் இந்திய அணியிலிருந்து நீக்கிவிட்டார்கள். பி.சி.சி.ஐ.யில் இருந்த சிலர் தான் இதனை செய்தார்கள். அணியை விட்டு 9 மாதங்கள் விலகி இருந்தேன். அப்போது அணியில் மீண்டும் பிரச்சினை வந்தது. அப்போது என்னை யார் நீக்கினார்களோ அவர்களே வந்து பயற்சியாளராக பொறுப்பேற்று கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அது அவர்கள் முகத்தில் முட்டையால் அடித்தது போல் இருந்தது.

Recommended Video

Ravi Shastri-க்கும் Dravid-க்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.. Gambhir சொன்ன தகவல்
சர்ச்சை

சர்ச்சை

பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் கங்குலி, சச்சின், விவிஎஸ். லட்சுமணன் தான் அப்போது பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழுவில் இருந்தனர். இதனால் ரவி சாஸ்த்ரி மறைமுகமாக முன்னாள் வீரர்களை விமர்சித்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கங்குலி என்ன பதில் தரப்போகிறார் என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்ப்போம்..

Story first published: Friday, December 10, 2021, 22:22 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+