Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நச்சென்ற 5 விஷயங்கள்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா என்ன செய்யனும்.. ரவி சாஸ்திரி சூப்பர் ஐடியா

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எப்படி செயல்பட்டால் நல்லது என்பதற்காக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 5 முக்கிய அட்வைஸ்களை தந்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக பார்டர் கவாஸ்கர் கோப்பை உள்ளது. அதன்படி இந்திய அணி 2 - 0 அல்லது 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியாக வேண்டும்.

இதற்காக பிப்ரவரி 1ம் தேதியே கூடிய இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 8 ஸ்பின்னர்களை வைத்து பேட்டிங் பயிற்சியை செய்து வருவதாக தெரிகிறது.

ரவி சாஸ்திரி ஆலோசனை

ரவி சாஸ்திரி ஆலோசனை

இந்நிலையில் இந்திய அணிக்காக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 5 அறிவுரைகளை கூறியுள்ளார். அதில் முதல் விஷயம் அஸ்வின் தான். அஸ்வின் அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். பெரும்பாலான களங்களில் அவர் சாதிக்கக்கூடியவர். அதுவும் இந்திய களம் எனறால் கட்டுப்படுத்தவே முடியாது. ஒருவேளை பந்து நன்கு ஸ்பின்னாகி, பிட்ச் வரண்டு இருந்தால் அஸ்வின் தான் எமனாக நிற்பார். எனவே அஸ்வினை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அவர் நெருக்கடி இன்றி ஆடுவதே வெற்றிக்கு முதல்படி.

3வது சுழற்பந்துவீச்சாளர்

3வது சுழற்பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால் குல்தீப் யாதவ் தான் ஆட வேண்டும். ஜடேஜா மற்றும் அக்‌ஷர் இருவருமே ஒரே மாதிரியான பவுலர்கள். ஆனால் குல்தீப் வித்தியாசமானவர். ஒருவேளை டாஸில் தோற்று முதல் நாளே பந்தை ஸ்பின் செய்ய வேண்டும் என்றால் அது குல்தீப்பால் தான் முடியும். ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இல்லாத களத்தில் தாக்கம் ஏற்படுத்துவதே குல்தீப்பின் சிறப்பு. அவரை போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் இருபுறமும் டேர்ன் செய்வார்கள்.

சூர்யகுமார் தேவை

சூர்யகுமார் தேவை

களத்திற்கு ஏற்ப சுப்மன் கில்லை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இருக்க வேண்டும். நம்பர் 5வது இடத்தில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடும் ஒரு வீரர் என்றால் சூர்யா தான் உதவுவார். அதாவது பவுலர்களை மெய்டன் ஓவராக வீசவிடாமல் ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். வேகமாக 30 - 40 ரன்கள் அடிப்பதே ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். எனவே இந்திய அணி சிறப்பாக ஆட வேண்டும் என்றால் சூர்யகுமார் ஆட வேண்டும்.

முதல் 2 இன்னிங்ஸ்

முதல் 2 இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலியின் ரெக்கார்ட் வியப்பை தரும். தொடக்கத்திலேயே அவர் மட்டும் நன்றாக ஆடிவிட்டால் போதும். அதாவது முதல் 2 இன்னிங்ஸ்களில் அவருக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால், பின்னர் ஆஸ்திரேலியாவை வச்சு செய்துவிடுவார். அவர்கள் என்ன திட்டம் போட்டாலும் கோலியிடம் பலிக்காது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி கிட்டத்தட்ட 50 ரன்களை அடிக்கிறார்.

விக்கெட் கீப்பர் யார்?

விக்கெட் கீப்பர் யார்?

ரிஷப் பண்ட் இல்லாதது பெரும் இழப்பு. ஒருவேளை பிட்ச்-ல் நல்ல ஸ்பின் இருந்தால் சிறப்பான ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் போன்ற ஸ்பின்னர்களுக்கு ஸ்டம்புகளுக்கு பின் நின்று ஐடியா கொடுக்க நல்ல கீப்பர் தேவை. அதனை அணியின் சூழலுக்கு ஏற்ப தேர்வு செய்துக்கொள்ளட்டும். ஆனால் அவர் பயம் தரக்கூடிய பேட்டராகவும் இருக்க வேண்டும்.

Story first published: Tuesday, February 7, 2023, 9:06 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+